பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அரசினர் தொழில் துணிவு

24

அரபிக் கதைகள்

கொள்வது என்பது பொதுவான கருத்து, எந்த அளவுக்கு அரசினர் துணிந்து இத்திசையில் செய் லாற்ற வேண்டுமென்ற கேள்விக்கு மூன்றுவித விடைகள் காணலாம். 1. தொழிலில் மட்டுமன்றி வாணிகம், உழவு முதலிய எல்லாத் துறைகளிலும் அரசினரே தனி ஆட்சி புரியவேண்டும் என்பது கம்யூ னிசக் கருத்து. 2. சிறிதளவு கூடப் பொருளாதாரச் செயல்களில் அரசினர் ஈடுபடவோ தலையிடவோ கூடாது என்பது தூய்மையான முதலாளித்துவத்தின் கோட்பாடு. 3. தொழில் துறையில் கேந்திரமான பகுதிகளைத் தேசீயமாக்க வேண்டியது என்பது கலப்புப் பொருளாதார வாதத்தின் (Mixed economy) முடிவு. கம்யூனிசம் இயங்காத உலகநாடு களில் கலப்புப் பொருளாதார அமைப்பு விரைவாக வளர்ந்து வருகிறது. இந்நாடுகளில் அரசினர் தொழில் துணிவு பற்றி ஒரு தீவிர விவாதம் இடைவிடாது நடந்துகொண்டிருக்கிறது. ஆதரவாளர்கள் காட்டும் காரணங்களை முதலில் காண்போம்: 1. போர்க்கருவிகள், தளவாடங்கள் ஆகிய வற்றை உற்பத்தி செய்யும் தொழில்களை நிறுவ ஏராள மான மூலதனம் தேவை. அவற்றை இயக்குவதில் இரகசிய நிருவாகமும் அவசியம். ஆகவே தனியார் மனப்போக்குப்படி துறையின் பாதுகாப்புக்குரிய இன்றியமையாத தொழில்களை நடத்தவிடுவது நாட் டின் பாதுகாப்புக்குக் குந்தகமும் ஆபத்தும் விளை விக்கும். 2. அரிதாகவுள்ள சுரங்கத் தொழில்களைத் தனி மனிதர் விருப்பம்போல நடத்த அனுமதித்தால் நாட் டின் பொருளாதார வளர்ச்சி ஊனமுறும். நாட்டின் தாதுச் செல்வங்கள் குறுகிய கால ஊதியங்கருதிச் சூறையாடப்பட்டுவிடும். இயற்கை வளத்தைப் பேணிக் காக்கவும், பன்னெடுங்கால நோக்குடன் பயன்படுத்த வும், அரசினர் உரிமையும், ஆட்சியும் இத்தொழில் களுக்கு அவசியம். பிரிட்டன், நிலக்கரித் தொழிலைத் தேசீயமயமாக்கியதற்கு இதுவே ஒரு முதன்மையான காரணம். 3.நாட்டின் அடிப்படைத் தொழில்களாக உள்ள கனரகத் தொழில்கள் அரசினர் ஆட்சியில் இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சியைத் திட்டப்படி துரிதப் படுத்தலாம். 4. நெடுங்காலம் கழித்தே பயன் தரும் தொழில் களில் உடனடியாக அல்லது விரைவில் ஊதியம் விரும்பும் தனியார்துறை அக்கறை காட்டுவதில்லை. எடுத்துக்காட்டாகக் காடுகள் வளர்த்தல், மின்சக்தி நிலையங்கள், நீர்ப்பாசனத் தேக்கங்கள் 'முதலியன். இவற்றை நிர்மாணிப்பது அரசினர் கடமையாகும். 5. சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் முதலியவை பொருளாதார வளர்ச்சிக்கு நலனளிப் பவை எனினும் நேரடியாகத் திடமான ஊதியம் தர வல்லவை அல்ல. இம்மாதிரி வளர்ச்சிக்குத் துணை புரியும் தொழில்கள் அரசினர் தொழில் துணிவின்றி உருவாகா. 6. மின்சக்தி, தொலைபேசி, குடிநீர், நகரப் போக்குவரத்து முதலிய பொதுச் சேவைகளில் போட்டியிடும் பல நிறுவனங்களைவிட ஒரே ஒரு நிறு வனம் அமைப்பதே செலவைக் குறைக்கும். எனவே, இவற்றை அரசினர் நடத்துவதே சிறந்த முறை. 7. தனியார்துறையில் சில தொழில்களில் போட்டி நீங்கித் தனியுரிமை நிறுவனங்கள் எழுகின் றன. அவை பொருள்களை வழங்குவதைக் குறைத்து விலையை ஏற்றி மக்களைச் சுரண்ட முனைகின்றன. இப் போக்கைத் தடுக்கவும் திருத்தவும் அரசினர் தொழில் துணிவு வேண்டும் என்பது மற்றொரு காரணம், அரசினர் தொழில் துணிவில் கீழ்க்கண்ட குறைபாடுகளைச் சிலர் காண்கிறார்கள்..


வெற்றிகாணும் ஆத்திரம், பொறுப்புள்ள நிருவாகம், தன்னலம், இலாபநோக்கு, ஊக்கம், போட்டியில் நட்டப்பட்டால் முறிவு எனும் பயம். முயற்சி செய்வோரின் ஆக்கத்திறன். (Creation ability), புது வழிமுறை, பண்டம், கண்டுபிடிக்கும் ஆற்றல் முதலியன தனியார் துறையின் வெற் றிக்குரிய இயங்கும் அரசினர்துறை தோல்வியுறும் என்பது ஒரு பண்புகள். ஆகவே இவையின்றி வாதம். மேலும், அரசினரின் நிருவாகத்தில் தொழில் கூறப்படுகிற காலந்தாழ்த்தல், விலைவாசிக் கொள் நுட்பத்திறன் குறைதல், சிவப்பு நாடா முறை என்று கையில் ஊதிய நோக்கம்போன்ற குறைகள் கூடாது என்ற இலட்சியம் இருக்கிறது. அதே சமயத்தில் தொழிலாளர் கூலி, படி ஆகியவற்றில் அரசினர் நிறு. வனங்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது. இவற்றால் அரசினர் தொழில் துறையில் விறுவிறுப்பும், திறமையும் காண முடியாது. ஆகவே அரசினர் தொழில் துணிவு, தொழில் துறை யின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விட்டால் அதி காரம் ஓரிடத்தில் குவியும். அப்படிக் குவிவது அரசினர் துறையிலும் சரி, தனியார் துறையிலும் சரி, விரும்பத்தக்கதல்ல. கே. எஸ். சோ.

அரபிக் கதைகள் : ஷஹ்ரெயார் என் னும் மன்னனொருவன் தன் மனைவியின் ஒழுக்கங்கெட்ட நடத்தையைக் கண்டு வேதனையுற்று அவளைக் கொன்று விட்டு, உலகிலுள்ள எல்லாப் பெண்களுமே கற் பொழுக்கமில்லாத கயமைமிக்கவர்கள் என்று விபரீதமாயெண்ணி இனியொருத்தியை நிரந்தர மனைவி யாய்க் கொள்வதானாலும் அவளும் தனக்குத் துரோகம் இழைத்துவிடுவாள் என்று முடிவுகட்டி,தினம் ஒருத்தியை மணப்பதும், அன்றிரவு அவளுடனிருப்ப தும், மறுநாள் அவளைக் கொன்றெறிவதுமாக நாட் கடத்தினான். இந்தக் கயவனைத் திருத்துவதே சரி யென்று துணிந்த இவனுடைய மந்திரியின் மகள் ஷஹர்ஜாத் என்பவள் ஒரு நாள் இவனை மணக்கிறாள். இவனுக்குக் கதை கேட்பதில் ஆவல் அதிகம் என் பதை யுணர்ந்த அப்பெண் மிகவும் சுவையான கதை யொன்றைச் சொல்லத் தொடங்கி, பொழுதுபுலரும் தறுவாயில் சிறந்த கட்டத்தில் திடுமென்று அரைகுறை யாக நிறுத்திவிடுகிறாள். கதை முழுவதும் முடிந்தபின் அவளைக் கொல்லலாமென்று கருதிய மன்னன் அன்று உயிருடன் விட்டு விடுகிறான். மறு இரவு கதை தொடர்ந்தது; ஒரு கதை முடியும்பொழுதே மற்றெரு யடுத்து மறு இரவாக 1001 இரவுகள் கழியவும், கதை ஆரம்பமாகிவிட்டது. இங்ஙனமாக, ஓரிர்வை ஷஹர்ஜாத் எல்லாக் கதைகளையும் சொல்லி முடித் தனள். அந்தக் கதைகளின் மூலம் அறிந்த நீதி மன்னனின் தப்பெண்ணத்தை நீக்கி விட்டது. அவளையே இவன் தனக்கு மனைவியாகக் கொண்டுவிடுகிறான்.

ஷஹர்ஜாத், ஷஹ்ரெயார் மன்னனுக்கு 1001 இரவுகளில் சொன்ன சிருங்கார மற்ற ரசங்களும் இனிமையுடன் சொட்டுகின்ற, இடை ரசம் மிகுந்த யிடையே நயமிக்க பல கவிதைகள் செறிந்த, சிந்த னைக்கு விருந்தூட்டுகிற, துன்பம் மிக்கோர்க்கும் இன்பம் பயக்கிற கற்பனைக் கதைகளின் தொகுப்பே அல்பு லைலா வலைலா என்னும் சிறந்த காவிய இரவு; மாக இலங்கி வருகிறது. (அல்பு ஆயிரம்; லைலா. எனவே நூலின் பெயரே 1001 இரவுகள் என்பதாம்). இது ஒரு தொகுப்பு நூல்; தொகுப்பா சிரியர் எவரென்பது தெரியவில்லை. அப்பாஸ் வம்ச