பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பும் எஃகும்

91

இரும்பும் எஃகும்

எஃகின் மேற்பாகமே மாறுதலடைகிறது. பொருளின் நடுப்பாகத்தில் இதன் பயன் அவ்வளவாக இராது. ஆனால், அழுத்தி எந்திரங்களின் உதவியால் அழுத்துவதாலும், காய்ச்சி அடிப்பதாலும் இதன் பயன் பொருள் முழுவதும் பரவச் செய்யலாம். இம்முறைகள் உருளைகளில் நீட்டுவதைவிடச் சிறந்தவை. கப்பல்களின் தள்ளிகள் (Propeller) முதலிய உறுப்புக்கள் இவ்வகையில் உருவாக்கப்படுகின்றன.

உருளைகளில் நீட்டுதல் (Rolling) : தங்கம், வெள்ளி போன்ற மிருதுவான உலோகங்களை 16 ஆம் நுற்றாண்டில்

உருளை எந்திரத்தில் தண்டவாளம் செய்தல்
உதவி : டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை

உருளைகளிலே நீட்டி வேலை செய்து வந்தார்கள். ஆனால் 18 ஆம் நூற்றாண்டில்தான் உருளைகளில் வேலை செய்யும் முறை வழக்கத்திற்கு வந்தது. படத்தில் இம்முறை காட்டப்பட்டிருக்கிறது.

உற்பத்தியாகும் எஃகில், 95% உருளைகளில் வடிவாக்கப்பட்ட சாமான்களாக விலையாகின்றது. பாளங்களை அச்சுக்களிலிருந்து எடுக்கும்போது அவற்றின் வெப்ப நிலை சுமார் 1,000° வரையில் இருக்கும். உடனே பொந்துகள் போன்ற அடுப்புக்களில் வைத்து 1.200°- 1300° வரையில் அவற்றைச் சீராகக் காய்ச்சுவார்கள். இவ்வடுப்புக்கள் கல்கரிவாயுவினால் சூடேற்றப்படுகின்றன. பிறகு இப்பாளங்கள் உருளைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

தற்காலத்திய உருளை எந்திரங்கள் (Rolling mills) மிகவும் சிக்கலான அமைப்புள்ளவை. இவை மின்சாரத்தால் இயங்குகின்றன. 5 டன் கனமுள்ளவைகளும் சுமார் 2 அடி சதுரமும், சுமார் 7 அடி நீளமுள்ளவைகளுமான பாளங்களைச் சூடேற்றியதும் முதலில் இரு உருளைகளுள்ள எந்திரத்தினிடையே சுமார் 16 தடவை 2½ நிமிட நேரத்தில் முன்னும் பின்னும் செலுத்தி 10 அங்குல சதுரக் கட்டிகளாக நீட்டுவார்கள். உருளைகளின் இரு புறங்களிலுமுள்ன மேடைகளில் பாளங்கள் அடிக்கடி பக்கவாட்டில் திருப்பப்பட்டு, எல்லாப் பக்கங்களிலும் சீராய் நீட்டப்படுகின்றன. இவ்வாறு பாளங்களை வேலை செய்ய உதவும் உருளைகள் மிகவும் வலிவுள்ளனவாக இருக்கவேண்டும். நீரை இவற்றில் தெளித்து இவை குளிர்விக்கப்படுகின்றன. எஃகு கலவைகளாலான பாளங்களை நீட்டும்போது வெடிப்புக்கள் வராதவாறு அவற்றை இயக்கவேண்டும். திரும்பவும் இவை அடுப்புக்களில் காய்ச்சப்பட்டு வடிவாக்கப்படுகின்றன. ஒன்றை அடுத்து ஒன்றாக உள்ள 6 ஜோடி உருளைகளில் எஃகு பாளங்கள் ஒரே சமயத்தில் நீட்டப்படுகின்றன. முதலிலுள்ள உருளைகளின் நடுவே சற்று நீண்டதும் அந்நீண்ட பாகம் அடுத்தாற் போலுள்ள உருளைகளின் மத்தியில் இன்னும் நீட்டப்படுகின்றது. உருளைகள் சுற்றும் வேகங்களைச் சரிப்படுத்தி, எஃகு வளையாமல் சரியாய் நீளுமாறு செய்யலாம். தகடு செய்வதற்குத் தட்டைகள் தகடு உருளை எந்திரத்தில் (Sheet mills) செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தடவை நீட்டு முன்னும் கட்டிகளை வெண்சூட்டிற்குக் காய்ச்சவேண்டும். தகடுகளாக்கும்போது அவற்றின் மேற்பரப்பிலிருந்து பரவும் சூட்டினால் அங்கு வேலை செய்வோர்க்குத் தொல்லை நேர்கிறது. ரெயில் தண்டவாளங்கள், கட்டடங்களுக்குப் பயன்படும் தூலங்கள் போன்றவைகளைச் செய்யும் எந்திரம் தண்டவாள எந்திரம் (Rail Mill) எனப்படும்.

மோட்டார் வண்டிகளில் பயன்படும் மேல் தகடுகள் சூடேற்றப்படாமலே தகடு (Strip) எந்திரங்களில் தயாரிக்கப்பட்டுப் பெரிய சுருள்களாக வெளியே எடுக்கப்படுகின்றன. கால் அங்குல அளவுள்ள எஃகின் கம்பிகள் துரு இல்லாமல் சுத்தம் செய்யப்பட்டு, வயிரத்தைப்போல் கடினமான துவாரங்களின் வழியாக எந் திரங்களால்மெல்லிய கம்பிகளாக இழுக்கப்படுகின்றன.

குழாய்கள் செய்ய முதலில் தகடுகளைத் தயாரித்து. அவற்றைச் சூடேற்றிக் குழாய் வடிவான ஓர் அச்சில் இழுத்து அதன் விளிம்புகளை இணைக்கிறார்கள். அல்லது இளகிய உலோகத் தடியை இரு உருளைகளுக்கிடையே சுழற்றி, அதன் நடுவே தொளை செய்து குழாயாக வடிவாக்குவதும் உண்டு.

எஃகில் உள்ள கரியின் முக்கியத்துவம்: இரும்பிலும் எஃகிலும் உள்ள கரியின் அளவைப் பொறுத்தவை அவற்றின் பண்புகள். கரியின் விகிதம் அதிகமானால் எஃகின் கடினமும் வலிமையும் அதிகமாகின்றன கரி 0.4 சதவிகிதம் உள்ள எஃகு சுத்த இரும்பைப்போல் இருமடங்கும், 10 சதவிகிதம் உள்ள எஃகு மூன்று மடங்கும் வலிமை கொண்டது. ஆனால் கரியின் விகிதம் அதிகமாக ஆக, அது சீக்கிரம் உடையும் தன்மையடைகிறது. 1.0-1.5% கரியுள்ள எஃகு வகைகள் அதிகக் கடினமானவை. ஆனால் இவற்றின் வலிமை குறைவு. கடினமான இவை ஆயுதங்கள் செய்யப் பயன்படுகின்றன. ஆனால் இவை எளிதில் உடையும் தன்மை கொண்டவை. 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமான

கரியைக் கொண்ட இரும்பு வார்ப்பிரும்பு எனப்படும். இதை எளிதில் உருக்கி வார்க்கலாம். அனால் இதன் வலிமையும் கடினமும் குறைவு. உபயோகத்திற்குத் தகுந்தவாறு, எஃகு வகைகளின் கரிப்பொருள் விகிதம் மாறுபடுகிறது.