பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழை

137

இழை

வைத்திருந்து, முதிரவீட்டுக் கார்பன் டைசல்பைடு திரவத்தில் கரைத்தால், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற மான பொருள் கிடைக்கிறது. இதை நீர்த்த சோடாக் ரயானைத் தூளாக்கும் எந்திரம். உதவி : திருவிதாங்கூர் ரயான் கம்பெனி, திருவிதாங்கூர். காரத்தில் கரைத்து வடிகட்டினால் பிசுபிசுப்பான திர வம் கிடைக்கும். இது விஸ்கோஸ் கரைவு எனப்படும். ரயானைப் பிசையும் எந்திரம். உதவி : திருவிதாங்கூர் ரயான் கம்பெனி, திருவிதாங்கூர். இதன் செய்முறையில் காலத்தையும் வெப்ப நிலையை யும் மிகத் திருத்தமாகக் கட்டுப்படுத்துவது அவசியம்.

இத்திரவம் நுண்ணிய தொளைகளுள்ள குழல்களின் வழியே ஒரு பெரிய தொட்டிக்குள் இருக்கும் அமில் நீருக்குள் செலுத்தப்படுகிறது. இந்நீரில் 10% கந்த ரயானை நூற்கும் எந்திரங்கள். உதவி : திருவிதாங்கூர் ரயான் கம்பெனி, திருவிதாங்கூர், காமிலமும், 20% சோடியம் சல்பேட்டும். 4% குளுக் கோசும், சிறிது நாக சல்பேட்டும் கலந்திருக்கும். இதற் குள் மெல்லிய தாரையாகப் பாயும் விஸ்கோஸ் திரவம் கெட்டியாகி நூலாகிறது. இதை நன்றாகக் கழுவித் தூய்மையாக்கிக் காய வைத்துக் கண்டுகளாகச் சுற்றலாம். விஸ்கோஸ் ரயானின் அமைப்பு. செல்லுலோஸி னுடையதேயாம். இது ஈரத்தை அதிகமாக உறிஞ்சும் தன்மையது. இதை நீரில் நனைத்தால் நீளத்தில் நூறு சதவிகித மும், குறுக்களவில் நாற் பது சதவிகிதமும் அதி கரிக்கிறது. அப்போது இதன் இழுவலிமை சுமார் 50% வரை குறை கிறது. இது பளபளப் பும் மழமழப்புமான நூல், பருத்தியைவிட ரயான் கண்டுகள். உதவி: திருவிதாங்கூர் ரயான் கம்பெளி, திருவிதாங்கர், இது நன்றாகச் சாயங்களை ஏற்கும். இதன் செய் முறையை மாற்றி விசேஷப் பண்புகள்கொண்ட நூலைப் பெறலாம். அசிட்டேட்டு முறை: விஸ்கோஸ் முறைக்கு அடுத்த படியாக முக்கியமானது அசிட்டேட்டு முறை எனப் படும். இதற்குப் பருத்திச் சிலும்பல் முக்கியமான மூலப் பொருளாகப் பயனாகிறது. இதை வெளுத்து, மாசு நீக்கி, அசிட்டிக அமிலத்தில் ஊறவைக்க வேண்டும். இவ்வாறு ஊறிய பருத்தியைச் சரியான வெப்பநிலையில் நீரற்ற அசிட்டிக அமிலமும் பனி அசிட்டிக அமிலமும் கலந்த திரவத்துடன் சிறிதளவு கந்தகாமிலத்தின் முன் னிலையில் வினைப்படுத்தினால் பருத்தியிலுள்ள செல்லு லோஸானது அசிட்டேட்டாக மாறித் தெளிவான கரைவை அளிக்கும். இதை நீருடனும் அசிட்டிக அமிலத்துடனும் கலந்து சில மணி நேரம் வைத்திருந்து

18