பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறகு

147

இறகு

தேனீயில் ஒவ்வொரு பக்கத்து முன்பின் இறக்கைகளும் கொக்கிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பூச்சி உட்காரும்போது அதன் இறக்கைகள் நேர்த்தியாக மடிந்துகொள்ளுகின் றன. தட்டான் பூச்சியில் விமானத்தின் இறக்கைகள்போல மடியாமல் இருபுறமும் நீண்டே இருக்கின்றன. வண்ணத்துப்பூச்சி இறக்கைகள் நடுமுதுகில் செங்குத்தாகப் படகின் பாய் போல நிமிர்ந்து நிற்கின்றன. வீட்டிலில் கிடை மட்ட மாகப் படிந்திருக்கும். பல இறக்கைகளில் சிறு செதில்களும் மயிர்களும் வளர்ந்திருக்கும். அவை ஒளி ரும் நிறங்களுடன் தோன்றும். ஆண்பெண் பாலுக் கும், தட்பவெப்ப நிலைக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு நிறம் மாறுபடுதல் உண்டு. இவற்றின் நிறம் இவை வாழும் இடத்தோடு ஒன்றித்து, இவற்றை வேறு பிரித்து அறிய முடியாதவாறு செய்கிறது. பிற பிராணி களால் துன்புறுத்தப் பெறாமலிருக்க, ஒரு பூச்சிக்கு அமைந்திருக்கும் இறக்கையைப்போலவே, ஆபத்துக்கு அடிக்கடி உள்ளாகும் மற்றொரு பூச்சியின் இறக்கை அமைந்திருப்பதுண்டு. இது போலிமை (Mimicry த.க.) எனப்படும். வேறு பிராணிகளிலும் மெல்லிதாகத் தட்டையாக உடலின் பக்கங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் பாகத்தை இறக்கை அல்லது சிறகு என்பதுண்டு. தாவரங்களிலும், கனிகளிலும், விதைகளிலும் சில பாகங்கள் இறக்கைபோல அமைந்திருக்கும். இவற்றின் உதவியினால் அந்தக் கனிகளும் விதைகளும் காற்றில் நெடுந்தூரம் பறந்துபோகும். இவ்வழியாகத் தாவரங் கள் பரவும். ற கு பறவைகளுக்கே சிறப்பான உறுப்பு. எல்லாப் பறவைகளிலும் இறகு உண்டு. பறவையின்றி வேறெந்தப் பிராணிக்கும் இறகுபோர்வை கிடை யாது. பாலூட்டிகளில் மயிர் வளர்வது போலப் பறவைகளின் தோலிலிருந்து இறகு முளைத்து வளர் கிறது. அது தோலின் மேலடுக்கிலுள்ள கொம்புப் பொருளாலானது. அந்தப் பொருள் கெரட்டின் எனப் படும். ஒரே கொம்புப் பொருளாலானாலும் இறகில் காணும் வேறுபாடுகளையும், கட்டையும், நிறத்தையும் அது செய்யும் வேலையையும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. இறகானது பறவையின் உடம்புக்கு இலேசானதும் கதகதப்பானதுமான ஒரு போர்வை. மேலும் இறக்கை யிலும் வாலிலும் உள்ள பெரிய இறகுகள் பறப்பதற்கு உதவுகின்றன. பறவையின் உடவிலிருக்கும் இறகுகளைப் பலவாறாகப் பிரிக்கலாம். சில இறகுகள் உடலுக்கு வெளியுருவத்தைத் தருகின்றன. அவைகளை உடல் இறகுகள் (Contour feathers) என்கிறோம். சிறகு களிலும் வாலிலும் உள்ள இறகுகள் மற்ற இடங்களில் இருப்பவற்றைவிட நீண்டிருக்கின்றன. சிறகின் நீண்ட இறகுகளின் பாகங்களை விவரித்து, அவை எப்படிப் பறக்க உபயோகப்படுகின்றன வென்பதைப் பறவை என்னும் கட்டுரையில் காண்க. வாலிலுள்ள நீண்ட இறகுகள் 10 அல்லது 12 இருக்கலாம். அவை பறக் கும்போது சுக்கானைப்போலக் திசையை மாற்றப் பயன் படுவதோடு, உட்கார இறங்கும்போது வேகத்தைக் குறைக்கும் முட்டாகவும் உபயோகப்படும். பறவையின் அலகையும் கால்களையுந்தவிர உடல் முழுவதும் இறகுகள் மூடியிருக்கின்றன, எனினும் சிறகுகளின் ஓரங்களிலும் வாலின் நுனியிலுமிருக்கும் நீண்ட இறகுகள் மட்டுமே பறக்க உதவி செய்கின்றன. இந்த இறகுகளைக் கத்தரித்துவிட்டால் பறவை பறக்க முடியாது. பறப்பதின் இரகசியத்தை இந்த நீண்ட

இறகுகளிலிருந்தே கண்டுபிடிக்க வேண்டுமாகையால் ஒவ்வோர் இறகும் பறக்கிறதற்கு எப்படி அமைக்கப் பட்டிருக்கிற தென்பதைப் பார்ப்போம். 1 G A 2. 1. பறவையின் இறக்கை விரித்திருப்பது. 2. இறகின் அமைப்பு. A. பெரிய இறகு. 2. முருந்து. உள்ளே மெத்தென்றிருக்கும் நெட்டிபோன்ற சோறு அடுக்கடுக்காகக் காணும்.இடையிடையில் வெளி கள் இருக்கும். b. இறகு பரப்பு. C. ஈர்க்கு. B. சுணைகளும் சிறு சுணைகளும். C. வெளிப்புறச் சிறு சுணை. D. உட்புறச் சிறு சுணை. ஒவ்வொரு நீண்ட இறகிலும் ஒரு குழலான காம்பும் தட்டையான விசிறிபோன்ற பாகமுமுண்டு. இவை முறையே முருந்து என்றும் இறகுபரப்பு என்றும் பெயர்பெறும் விசிறிப் பாகத்தின் நடுநரம்புபோன்ற ஈர்க்கிலிருந்து, இரு பக்கங்களிலும் இழைபோன்ற பிரி வுகளுண்டு. அப்பிரிவுகளுக்குச் சுணைகள் (Barbs)என்று பெயர். ஒவ்வொரு சுணைக்கும் இரு பக்கங்களிலும் சிறு பிரிவுகளுண்டு. அவை சிறு சுணைகள் (Barbules). சிறு சுணைகளுக்கு ஒருபுறத்தில் மட்டும் கிளைகளுண்டு. அக் கிளைகள் சிறு கொக்கிகளாகச் சுருண்டுகொண்டு ஒவ் வொரு சிறு சுணையையும் அடுத்த சிறு சுணையோடு இணைத்துக் காற்று ஊடுருவிச் செல்லாதபடி செய் கிறது. இக்கொக்கிகளின் அமைப்பே பறவைகள் பறக்கும் சக்தியின் இரகசியம். உடல் முழுவதும் உருவந் தரும் இறகுகளால் மூடி யிருப்பது போலிருந்தாலும், அவைகளைப் பிடுங்கி விட்டால் அவை சில பாகங்களில் மட்டுமே வளர்கின் றனவென்றும், இடையிலே இறகுகளில்லாத பாகங் களுமுண்டென்றும் காண்கிறோம். இறகுள்ள பாகங் களுக்கு இறகுதடங்கள் (Pterylae) என்று பெயர். இறகுகள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படும்போது இறகு முளைக்காத இடங்கள் மறைந்து போகின்றன. உடலிறகுகளுக்கு நடுவில் மென்மையான பொடி இறகு