பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுக்குதடை

151

இறுத்தல்

நிறுத்தாமலே ஒன்றாக இணைக்கவோ, விடுவிக்கவோ உதவும் சாதனம் இறுக்குதடை எனப்படும். மிக எளிய அமைப்புள்ள எந்திரங்களிலிருந்து மிகச் சிக்கலான எந்திரங்கள் வரை பலவகையான எந்திரங்களில் இது பயன்படுவதால் எந்திரத்திற்கேற்றாப்போல் இதன் அமைப்பும் வடிவமும் வேறுபடும். எந்திரங்களில் பயனா கும் இறுக்கு தடைகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். இவை நேர் இறுக்குதடைகள், உராய்வு இறுக்குதடை கள் எனப்படும். இறுக்குதடை நேர் இறுக்குதடையின் ஒரு பகுதி ஒட்டும் தண்டுட னும், மற்றது ஓடும் தண்டுடனும் உறுதியாக இணைக்கப் பட்டிருக்கும். இவ்விரண்டு பகுதிகளின் விளிம்புகளில் பற்கள் வெட்டப்பட்டு, ஒரு பகுதி மற்றதைப்பற்றிப் பிணைந்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை ஒன்றாகப் பிணைத்தால் ஓடும் உறுப்பு ஒட்டும் உறுப்புடன் இணைந்து ஓடும். விடுவித்தால் ஓடும் உறுப்பு விடுபடும். தொளைபோடும் எந்திரங்கள், கத்தரிக்கும் எந்திரங்கள் போன்ற எந்திர ஆயுதங்களில் இத்தகைய இறுக்குதடை பயன்படுகிறது. சைக்கிளின் மிதிப் படியை (Pedal) அழுத்தும்போது பின் சக்கரத்தை இறுக்குதடை for s யும், பல்சக்கரத்தை யும் ஓர் இறுக்கு தடை இணைத்து, இரண்டும் ஒன்றாக நகர உதவுகிறது. மிதிப்படியை நிறுத் தியவுடன் இறுக்கு தடை விடுபட்டுச்.சக் கரம் மட்டும் சுழ லும். உராய்வு தடைக ளில் இயங்கும் உறுப் பொன்றை நிலையான உறுப்பு டன் இணைத்து, அது வேகமாகச் சுழலுமாறு செய்து, ஒன்றன்மேல் மற்றொன்று நழுவாமல் சக்தியைக் கடத்துமாறு அமைக்கிறார்கள். இவ்வகைத் தடையில் இரு உறுப்புக்களினிடையே உராய்வை ஏற்படுத்தி, அவை இணையுமாறு செய்யப்படுகிறது. 'கூம்பு இறுக்கு . தடை என்பது மிக எளிய அமைப்புள்ளதும், அதிகமாக வழங்குவதுமான சாதனமாகும்.

பெரிய மோட்டார் வண்டிகளில் வ்வகை இறுக்குதடை பயன்படுகிறது. எஞ்சினின் சம இயக்கச் சக்கரத்தின் (ச) விளிம்பு உட்புறத்தில் கூம்பு வடிவாக அமைந்திருக்கும்.(கூ). எஞ்சினின் தண்டு கூம்பு வடி வான வேறோர் உறுப்புடன் இணைந்திருக்கும் (கூ). இந்த உறுப்பை ஒரு வில் சுருள் (வி) சக்கரத்தின் விளிம் பிற்குள் அழுத்தி, இவ்விரண்டையும் இணைத்து, சக்தி கடத்த உதவும். இவ்விரண்டினிடையே உராய்வை ஏற்படுத்த வெளிக் கூம்பின் விளிம்பில் தோல், கல்நார் தக்கை போன்றதொரு பொருள் பொருத்தப்பட்டிருக் கும். இறுக்குதடையின் பெடலை (பெ) அழுத்தினால் வில்சுருள் சுருங்கி இரு கூம்புகளையும் பிரித்துவிடும் மோட்டார் எஞ்சினை இயக்கத் தொடங்கும்போது தடையைப் போட்டுச் சக்கரத்தை எஞ்சினின் தண்டி லிருந்து விடுவித்து விடுவார்கள். எஞ்சின் வேகமாக ஓடத் தொடங்கியபின் தடையை நீக்கி இரண்டையும் ஒன்றாக இணைப்பார்கள். தட்டு இறுக்குதடை என்பது இதைவிடத் திறமை யாக இயங்குவதால் இதுவே அதிகமாகப் பயன்படு கிறது. இதில் ஓர் எஞ்சினின் தண்டில் வரிசையாகச் சில தட்டுக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஓடும் தண் டிலும் இதே வடிவுள்ள தட்டுக்கள் இருக்கும். ஒரு வில்சுருளின் உதவியால் இந்த இரண்டு வரிசைத் தட்டுக்களையும் அழுத்தலாம் அல்லது விடுவிக்கலாம். தட்டுக்கள் அழுந்தி இருக்கும்போது ஓடும் உறுப்பும் ஓட்டும் உறுப்பும் இணைந்திருக்கும். தடையைப்போட்டு இவற்றைப் பிரித்தால் உறுப்புக்களும் விடுபடும். எண் ணெய்க்குள் அமிழ்த்தப்பட்ட இரு உலோகத் தட்டுக் களின் இடையிலோ, உலோகத் தட்டிற்கும், தோல் அல்லது இதையொத்த வேறொரு பொருளிற்கும் இடை யிலோ உராய்வு ஏற்படுமாறு இது அமைக்கப்படு கிறது. நெம்புகோல்களினாலும், வில்சுருள்களினாலும் இறுக்கு தடையைப் போடுவதற்குப் பதிலாகக் காந்தக் கவர்ச்சியினால் உராயும் பரப்புக்கள் ஒன்றாக இணையு மாறு செய்யும் முறை அண்மையில் வழக்கத்திற்கு வந் துள்ளது. பரப்புக்களோடு கம்பிச் சுருள்களைப் பொருத்திவைத்து, அவற்றின் வழியே மின்சாரத்தைச் செலுத்தினால் இப்போது விளையும் காந்த விசைகளால் உராய்வுப் பரப்புக்கள் ஒன்று சேர்ந்து உறுப்புக்கள் இணையும், பல நன்மைகளையுடைய இவ்வகை இறுக்கு தடை தற்காலத்தில் அதிகமாக வழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இறுத்தல் (Decantation) : ஒரு திரவத்தில்

கரையாப் பொருள் மிதந்துகொண்டோ சீராகத் திர வம் முழுதும் பரவியோ இருக்கலாம். உதாரணங்கள் மோர், வண்டல் நீர். கரையாப் பொருள் திரவத்தை விடக் கனமாக இருந்தால், அந்தப் பொருள் பாத்திரத் தினடியிற் படிந்து விடும்; தெளிவான திரவம் மேலே நிற்கும். அதைச் சாய்த்து வார்த்துவிடலாம். இம் முறையில் திரவத்தைப் பிரித்தல் இறுத்தல்எனப்படும். கரையாப் பொருள் படியும் வேகம் அதன் துணுக்குக் களின் பருமனைப்பொறுத்தது. துணுக்குக்கள் மிகச்சிறி யனவாயிருப்பின், அவை படியாமல் நிலையாயிருக்கும்; வடிகட்டினால் கூட அகற்றப்படாமல் இருப்பதும்உண்டு. அவ்வகைப் பண்டத்தைக் கலக்கியோ, வேண்டிய ரசா யனப் பொருள்களைச் சேர்த்தோ, திரவத்திலுள்ள சிறு துகள்கள் ஒன்று சேர்ந்து பெருந் துகள்களாகுமாறு செய்யலாம். இப்போது கரையாப் பொருள் கொத்துக் கொத்தாகத்திரிந்து, வெளிப்பட்டு, விரைவாய்ப்படிந்து