பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷூரன்சு

157

இனப்புள்ளியியல்

அதிகமாகச் செய்திருந்தால், நஷ்டம் எவ்வளவோ அவ்வளவே இன்ஷூரன்சால் பெற முடியுமே அன்றி, இன்ஷூர் செய்த முழுத் தொகையையும் பெற முடி யாது. இன்ஷூர் செய்த தொகை நஷ்டமான பொருளின் மதிப்பைவிடக் குறைவாக இருந்தால் கீழ்க்கண்ட விகி தத்தில்தான் நஷ்ட ஈடு கிடைக்கும். நஷ்ட ஈடு பெறக் கூடியது= நஷ்டம் X இன்ஷூர் செய்த தொகை நஷ்டமான பொருளின் மதிப்பு கடல் இன்ஷூரன்சிலும் பொதுவாகப் பொருள் மதிப்பு, தீ இன்ஷூரன்சு விதிகளை ஒட்டியது.ஆயினும், மதிப்பு இன்னதென இன்ஷூர் செய்பவரும் பாலிசிதார ரும் தமக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்ஷூர் செய்யப்படும் பொருளைப்பற்றி அதன் சொந் தக்காரரே முழுதும் அறிவார். அவர் சொல்லுவதை முற்றிலும் நம்பியே இன்ஷூரன்சுக் கம்பெனி விபத் தின் நஷ்ட ஈட்டை ஏற்றுக் கொள்ளுகிறது. ஆதலின், பொருளைப் பற்றிய எல்லா விவரங்களையும் இன்ஷூர் செய்துகொள்பவர் இன்ஷுர் செய்பவருக்குக் கூறக் கடமைப்பட்டவர். இன்ஷூரன்சு ஒப்பந்தம் அக்கட மையை அடிப்படையாகக் கொண்டது. பிற வியா பாரங்களில் வழங்கும் "ஒரு பொருளை விலைக்கு வாங்கு பவன் சாக்கிரதையாக இருக்கக் கடவன் என் ன்ற நியதி இன்ஷூரன்சில் கிடையாது. ஆக, ஆயுள் இன் ஷூரன்சில் தம் உடல் நிலைமையைப் பற்றிய கேள்வி களுக்கும் தீ, கடல் போன்ற இன்ஷூரன்சுகளில் தம் பழைய வரலாறு, இன்ஷூர் செய்யப்படும் பொருள் உள்ள இடம், அதன் மதிப்புப்போன்றவற்றையும் முழு வதும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இன்ஷூர் செய்துகொள்பவருடையதே. அவ்வாறு தெரிவிக்கா விட்டால், ஒப்பந்தமே செல்லத் தக்கதல்ல. இன்ஷூரன்சு ஒப்பந்தப்படி பாலிசிதாரர் இன்னது செய்யவேண்டும், இன்னது செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளை விதிக்க இன்ஷூர் செய்பவருக்கு உரிமையுண்டு. இன்ஷூரன்சை ஏற்றுக் கொள்ளுவ தால் அந்த உரிமைகளையும் கடமைகளையும் ஒப்புக் கொண்டதாகவே பொருள். பின்னர் அதிலிருந்து தவறி யதால் நஷ்டம் நேரிடின், நஷ்ட ஈட்டைப் பெற முடி யாது. பாலிசிதாரர் உறுதி மொழியாகக் கூறுவதையும் இன்ஷுர் செய்பவர் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அந்த உறுதிமொழி தவறாயின். அத்தவற்றை உணர்ந்தே ஒப்பந்தம் செய்தாரா, அன்றி அத் தவற்றை முன்னரே அறிந்திருந்தால் இன்ஷூர் செய்பவர் தம் முடிவை மாற்றியிருக்கக் கூடுமா என் பனவற்றைப் பொறுத்து ஒப்பந்தம் நிராகரிக்கப்பட வாம் அல்லது ஏற்றுக்கொள்ளப்படலாம். இன்ஷூர் செய்பவர் ஒப்பந்தப்படி நஷ்ட ஈட்டைச் சரிக்கட்டிவிட்டால், நஷ்டத்திற்குட்பட்ட பொருளுக்கு உரியவராவார். அந்த உரிமையை விற்கவோ, பிற ருடன் பங்கிட்டுக் கொள்ளவோ பாத்தியதை அவ ருக்கு உண்டு. செய்பவர்கள் செய்ய இந்தியாவில் 1938-ல் இயற்றப்பட்ட இன்ஷூரன்சு இன்ஷூர் சட்டத்தின்படி வேண்டுவனவற்றில் குறிப்பிடத்தக்கவை: 1. இன்ஷூர் செய்பவர் ஆயுள் இன்ஷூரன்சிற்கு ரூ.2,00,000ம். எல்லாவகையான இன்ஷு பிரன்சுகளுக் கும் ரூ.4,50,000ம் அரசாங்கத்திடம் 'டிபாசிட்டு செய்யவேண்டும். T

2. தாம் வழங்கும் எல்லாப் பாலிசிகளையும் அவற் றின் பிரீமிய விகிதங்களையும் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும். 3. ஆண்டுக் கணக்குக்களையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இன்ஷூரன்சு கணக்கர்களின் (Actuaries) பரிசோதனைக்குட்படும் ஆயுள் பாலிசி மதிப்பீடுகளையும் அரசாங்கப் பரிசோதனைக்கு அனுப்பவேண்டும். 4. தம் ஆயுள் நிதியை அரசாங்கக் கடன் பத்திரங் களிலும், குறிப்பிட்ட சிறப்புவாய்ந்த பங்கு, கடன் போன்றவற்றிலுமே பெரும்பாலும் முதலீடு செய்ய வேண்டும். 5. லைசன்ஸ் பெற்ற ஏஜென்டு, அல்லது தனிப்பட்ட ஏஜென்டுகளின் மூலமாகத்தான் தம் பாலிசிகளைச் சேர்க்கவேண்டும். அத்தகையோரின் கமிஷன் வரை யறுக்கப்பட்டுள்ளது. 6. வருவாயில் எத்துணைப் பகுதி அவர்கள் செலவு களுக்காக எடுத்துக் கொள்ளலாமென்றும் வரையறுக் கப்பட்டுள்ளது. 7. அவர்களின் முதலீட்டுப் பங்குகள் எவ்வெவர் கையில் எத்துணை இருக்கக்கூடுமென்றும், பங்கு மாறு நடைமுறை இன்னதென்பதும் வகுக்கப்பட் தல் டுள்ளன. இனி, இன்ஷுர் செய்பவர்கள் பாலிசிதாரர்களின் அறியாமையைப் பயன்படுத்தி இலாபம் பெறாமல் தடுக்க, பாலிசிதாரர்களுக்குச் சில சலுகைகள் தரப்பட் டுள்ளன. அவையாவன : 1. ஆயுள் பாலிசி இரண்டு ஆண்டுகள் நிரம்பிய பின்னர் பாலிசிதாரர் உறுதிமொழியாகக் கூறியவற் றில் தவறு இருந்தாலும், அத்தவறு அவர் அறிந்து செய்தும்,பாலிசியைப் பாதிக்கக் கூடியதும் ஆக இருந் தால் மட்டுமன்றிப் பிற காரணங்களுக்காகப் பாலிசி நிராகரிக்கப்படக் கூடாது (ஷரத்து 45). 2. பாலிசிதாரர்களுக்கு ஆயுள் இன்ஷூர் செய் பவர் நிருவாகக் குழுவில் கால்பகுதியினரையேனும் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு (ஷரத்து 48). 3. பாலிசியால் உறுதி செய்யப்பட்ட தொகை ரூ.2,000க்குட்பட்டிருந்தால், அதைப் பற்றிய விவ காரங்களைக் கோர்ட்டுக்குப் போகாமலே தீர்த்துக் கொள்ளும் வசதி உண்டு (ஷரத்து 47). 4. ஆயுள் இன்ஷூரன்சில் உண்டாகும் இலாபத் தில் 922 சதவிகிதமாவது பாலிசிதாரருக்குச் சேர வேண்டும் (ஷரத்து 49). 5. மூன்று ஆண்டுகள் அமலிலிருந்த பாலிசி, பணம் கட்டாததால் உடனே அதன் நன்மைகளை இழக்க மாட்டாது; குறைந்த அளவு இன்ஷூரன்சாக வேனும். குறைந்த காலத்துக்கேனும் அது தொடர்ந்து செல்லத்தக்கது (ஷரத்து 113). 6. பாலிசி தன் நன்மையை இழக்குமுன், இன்ஷூர் செய்பவர் அதைப் பாலிசிதாரருக்கு அறிவிக்கக் கட மைப்பட்டவர் (ஷரத்து 50). ஏஜென்டுகளின் உரிமைகளும் கடமைகளும் இவ் வாறே வரையறுக்கப்பட்டுள்ளன. இனப்புள்ளியியல் (Demography): நவ. மக்க ளது பிறப்பு, சாவு,உடல்நலம், நோய், திருமணம் ஆகியவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களையும், மக்கள் தொகைப் பெருக்கத்தையும், குறைவையும், இவற்றிற் கான அடிப்படைக் காரணங்களையும் ஆராயும் பயன் முறைப் புள்ளியியலின் (Applied Statistics) பிரிவு இனப்புள்ளியியல் எனப்படும். மக்கள்தொகை நூல் என்று இதை வரையறுப்பதுண்டு. மானிட இனத்தின்