பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

162

இனப்பெருக்கம்

மெடுசாவிலிருந்து உண்டாகும் பாலணுக்கள் கலந்து பாலிப்பு வளர்வதும் உண்டு (பார்க்க: ஆரீலியா). இவற்றிலெல்லாம் பரலுள்ள தலைமுறையும் பாலிலாத் தலைமுறையும் மாறிமாறி வருகின்றன. இது தலைமுறை மாற்றம் எனப்படும். உண்டு. தாவரங்களிலும் இத்தகைய தலைமுறை மாற்றம் தாவர இனப்பெருக்கம் என்னும் பகுதியில் து விவரித்திருக்கிறது. தாவரங்களிலோ, பிராணி களிலோ தலைமுறை மாற்றம் நடப்பது அனுகூலமான பருவத்திலே விரைவாக இனம் பெருகுதலுக்காக எனத் தெரிகிறது. சூழலில் உண்டாகும் எவையோ சிறப் பான சில மாறுதல்களா லும் இது ஏற்படும். பொதுவாக, விரைவானதும் எளிதானதுமான இனப்பெருக்க முறை ஓருயிர் கலவியின்றிப் பலவாகப் பெருகுதலாம். மெது வானதும் சிக்கலானதுமான கலவிமுறை அவ்வப் போது தகவமைவுத்தேர்வுக்கு (Adaptive selection) ஏற்ற வேறுபாடுகள் உண்டாவதற்காக நடந்து வரும். ஆபத்து மிகுந்த வாழ்க்கையுள்ளவையும், வமி சத்தை விருத்தி செய்தலுக்கு வாய்ப்பு மிக அருமை யாக உள்ளவையுமான உயிர்வகைகளிலே வாழ்க்கை வட்டங்கள் மிகவும் சிக்கலாக அமைந்திருக்கின்றன. வேறு உயிர்களினுள்ளே வாழும் உள்ளொட்டுண்ணி (Internal parasite) களில் இதை நன்றாகக் காண லாம். ஓட்டுண்ணி மிகவும் பெருகிவிட்டால் ஆதார அயிர் அழிந்து போகும். அதனோடு ஒட்டுண்ணியும் அழிய வேண்டும். இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக இவ்வொட்டுண்ணிகளுக்கு இரண்டு ஆதாரவுயிர்கள் இருக்கின் றன. மலேரியாவை உண்டாக்கும் நுண் ணுயிர் மனிதனுக்குள்ளேயும் அனோபிலிஸ் கொசுவுக் குள்ளேயும் வாழ்கிறது. மனிதன் முதலாதாரம்; கொசு இரண்டாம் ஆதாரம். மூன்று ஆதாரவுயிர்களும் இருப்ப துண்டு (பார்க்க: ஒட்டுண்ணி, மலேரியா, ஈரல்புழு). இனப்பெருக்கமும் ஆயுளும், இனப்பெருக்க மானது புதிய உயிர்கள் தோன்றும் செயலேயாயி னும், பல சமயங்களில் அது தாயுயிர் இறத்தற்குக் காரணமாகவும் இருக்கின்றது. சில வளையப்புழுக் களிலே, பாலணுக்கள் பெருகி, அதனால் உடம்பு விம்மி வெடித்துவிடும். புழுவின் உயிர் போகும். சில புழுக் களிலே உடம்பின் பெரும்பகுதி இவ்வாறு விண்டு ஒழி யும்.தலை நுனிமட்டும் நிலைத்திருந்து, அடுத்த பருவத் தில் புதிய உடம்பு அதிலிருந்து வளரும். இப்படி உடம்பு வெடிப்பது ஒரு புறமிருக்க, முட்டைகளில் உணவைக் கூட்டி வைப்பதினாலும் ஏற்படும் கடு முயற்சி தாயின் உயிர்க்குக் கேடாய் முடியலாம். ஆணு யிரும் சில சமயங்களில் பாலுறுப்பின் விறைப்பு, இனப் பெருக்க ஹார்மோன்களினால் உடலில் ஏற்படும் காமக் கிளர்ச்சி ஆகியவற்றின் வேகத்தைத் தாங்கவொண்ணா மல் சாவதும் உண்டு. நொய்மையான வண்ணத்திப் பூச்சியிலும், மலங்குபோலக் காணும் லாம்ப்ரே (பெட் ரொமைசான்) என்னும் தடிப்பான ஒருவகை மீனிலும் ஆண், பெண் இரண்டுக்கும் இனப்பெருக்கச் செயல் கூற்றாக இருக்கின்றது. உயர்தர முதுகெலும்பிகளிலே இத்தகைய நிகழ்ச்சி பெரிதும் குறைந்துள்ளது. டத் தாய்க்குத்தான் பிள்ளைப்பேற்றில் நோதலும் சாத னும் மிகுதியாக இருக்கின்றன. மனித மூளை வளர்ச்சி யின் பயனாகக் குழந்தையின் தலை பருத்திருப்பதினா லும் நாகரிக வாழ்க்கையின் பயனாகத் தாயின் ஆரோக் கிய நிலை சீர்கெட்டிருப்பதனாலும் இந்த மரண ஆபத்து நேர்கிறது. மானி இன்னொரு வழியிலும் இனப்பெருக்கத்திற்கும் இறப் பிற்கும் இயைபுண்டு. ஒரு பிராணி உயிர்வாழ்ந்திருக்கக்

கூடிய ஆயுள்காலம் அதன் இனத்தின் நலத்திற்கு ஏற்ற வாறு அமைந்திருக்கிறது. பிராணி முழு ஆற்றலோடு கூடியுள்ள காலத்தில் இனப்பெருக்கம் நடக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதன் நல்ல வயது கடந்த பிறகும் அது சந்ததிகளைப் பெறுவது அந்தப் பிராணியினத்தின் நன்மைக்குக் கேடாகும். இனப் பெருக்கச் செயல் நடந்ததும் பிராணிகள் இறந்துபோவ. தற்கு இது ஒரு காரணம் . ஓரணுவுயிர்கள் மூப்புற்றுச் சாதல் இல்லையெனத் தோன்றுகிறது. ஒரு பாசியோ, அமீபாவோ தனக்கு உரிய ஒரு பருமனை அல்லது ஊட்ட நிலையை அடைந்த தும், அது இரண்டாகப் பிரிந்து விடுகிறது. தனி உயிராக இருந்தது, இரண்டு உயிர்களாக ஆகின்றது. இவற்றிற்குச் சாவு ஏற்படுவதானால் அது உணவின்மை யாலோ, பகையுயிர்களாலோ, இவைபோன்ற சூழ்நிலை யில் உண்டாகும் ஏதோ கேட்டினாலோதான் ஏற் படும். செத்துப்போன முன்னோர் என்பவை இவற் றிற்கு இல்லை. ஒவ்வோர் உயிரும் அதன் இனத்தின் முதல் உயிரின் நேர்வழியில் தோன்றியது. கருத்திசு (Germ) என்பதற்கு வேறாக உடம்பு (Soma) என்பது உண்டானது முதல் சாவு என்னும் இயற்கை நிகழ்ச்சி ஒவ்வோருயிரின் வாழ்க்கையிலும் தோன்றுகிறது. ஊட்டத்துக்குரிய அணுக்களின் கூட்டமாகிய உடம்பு அழிவடைகின்றது. இனப்பெருக்கத்தைச் செய்யும் பாலணுக்கள் மட்டும் அடுத்தடுத்து வரும் தலைமுறை களுக்குள்ளே தொடர்ச்சியை நிலைநிறுத்திக் காத்து வருகின்றன. உடம்பு என்பது ஒன்று உண்டாவதற்குக் கொடுக்க வேண்டிய தீர்வையே மரணம். எனினும் உயிர்ப் பொருளின் உயர்ந்த அனுபவங்களெல்லாம், சிக்கலான அமைப்புள்ள உடலிலே, பொதுத் தன்மை பெரிதும் நீங் கிச் சிறப்பான மாறுதல்களையடைந்துள்ள பலவேறு வகைப்பட்ட அணுத்திரன்களின் பண்ணமைந்த கூட் டுறவினாலே உண்டாவனவாகும். இப்படிப்பட்ட வேற் றுமையும் ஒற்றுமையும் சேர்வதே அவ்வனுபவங்களை நுகர்வதற்கு இன்றியமையாதுவேண்டப்படும் நிலையாக இருக்கின்றது. இந்த நிலையிலே இனம் நிலைத்திருக்க வேண்டுமானால் இன்றைய உயிர்கள் நாளைய உயிர் களுக்கு இடந்தரல் வேண்டும்.சாவே வாழ்வை நிரம்பப் பெறுவதற்கான வழியாகும்.

. தாவர இனப்பெருக்கம் உயிரினங்கள் எல்லாவற்றிலும் போலத் தாவரங் களிலும் சந்ததி என்றும் நிலைத்திருப்பதற்கு இன்றி யமையாமலும் உடனடியாகவும் முதலில் இருக்கவேண் டிய ஆற்றல் இனப்பெருக்கச் சக்தியாகும். இந்தச் சக்தியானது உயிரணுக்களிலுள்ள உட்கருவினுள் இருக்கும் மிகவும் நுண்மையான மணிபோன்ற ஜீன்கள் என்னும் உற்பத்திக்குக் காரணமான சிறப்பான கருப் பொருளில் அடிப்படையாக அமைந்திருக்கின்றது. ஒரு ஜீனானது இரண்டாகப் பிரிந்து,முற்றிலும் தன்னைப் போன்ற இன்னொரு ஜீனை உண்டாக்கும் ஆற்றலுடை யது. தன்னை இருமடியாக்கிக் கொள்ளும் ஜீனுக்குள்ள இந்த ஆற்றலே உலகத்திலேயுள்ள உயிர்களிடத்திலே ஆதியிலே முதன் முதலாகத் தோன்றிய இனப்பெருக் கப் பண்பாக இருந்திருக்க வேண்டுமென்று, முல்லர் என்னும் அறிஞர் கருதுகிறார். எல்லா உயிர்களிடத் திலும் இயற்கைப் பண்பாக அமைந்துள்ள வாழ்க்கை வட்டங்கள் அல்லது தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன் றாகத் தோன்றுதல் என்னும் தன்மைக்கு ஜீனின் இந் தச் செயலே மூலாதாரமான நிகழ்ச்சியாகும்.