பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடு தரு பொருள்கள் காடு தரு பொருள்கள் மேன்மையானது. இந்த எண்ணெய் வடிக்கும் தொழிலை நீலகிரியில் மிகுதியாகப் பலர் செய்கின்றனர். கத்தக் காம்பும் காசுக்கட்டியும் (த.க.) காய்ச்சி எடுப்பனவே. எண்ணெய் வித்துக்கள்: காடுதருபொருள்களில் எண் புல், மூங்கில், பிரம்பு: இவை மூன்றும் ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவை. புல் கால்நடைக்கு உணவாவது. மேய்ச்சல் கட்டணம் இராச்சியத்திற்கு நல்ல வருவாய். மாட்டுக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாயாக இந்தக் காடுகளில் 2}கோடி மாடுகள் மேய்கின்றன. புல் கூரை வேயவும்,ணெய் வித்துக்கள் முக்கியமானவை. அவற்றுள் வெண் காகிதம் செய்யவும், கயிறு திரிக்கவும், கூடை முதலி யவை முடையவும், பாய் பின்னவும் பயன்படுகின்றது. சாபைப்புல், மஞ்சம் புல் (Ischaemum angusti folium), இலாமிச்சை (வெட்டிவேர்) மணமானவை. போதைப் புல் என்பது காகிதம் செய்யத் தகுதி யானது. மூங்கிலிலிருந்து காட்டிலாகாவுக்கு நல்ல வரு வாய் கிடைக்கின்றது. அது ஏழைகளுக்கு மிகவும் பயன்படும் மரம். குடிசை போடுவதற்கும், எண்ணி றந்த பொருள்கள் செய்வதற்கும், கோழிக்கூடு, கூடை, பாய், தட்டி முதலியவை முடைவதற்கும், மேசை, நாற் காலி செய்வதற்கும் மிகுதியாகப் பயன்படுகின்றது. மூங்கிலில் முக்கியமாக ஆண் மூங்கில் என்றும், பெண் மூங்கில் என்றும் இருவகையுண்டு. குங்கிலிய விதைகள் 100 முதல் 200 டன் அளவுக்குச் சென்னை இராச்சியக் காடுகளில் கிடைக்கின்றன. புங்கம் விதை 2.000 டன், இலுப்பை 5,000 டன், வேம்பு 1,000 டன், புன்னை 200 டன், நீரடிமுத்து 1,000 டன் ஆண்டு தோறும் கிடைக்கும் என்று கணித்துள்ளனர். பதனிடும் பொருள்களும் சாய்ப் பொருள்களும்: பதனிடப் பயன்படும் பொருள்கள் காட்டு மரங்களின் பட்டை, கனிகள், இலை முதலியவற்றிலிருந்து கிடைக் கின்றன. சாயங்களோ பட்டை, மரம், பூ, வேர் முதலியவற்றிலிருந்து கிடைக்கின்றன. உள்நாட்டில் உண்டாகும் பதனிடும் பொருள்கள் இந்தியாவின் தேவைக்குக் குறைவானதானதாலும் தென்னாப்பிரிக்க காவிலிருந்து வரும் சீமை வேலம்பட்டை இந்தியத் தேவைக்குப் போதாமையாலும் சென்னை இராச்சியத்தி லேயே உண்டாகும் பதனிடும் பொருள்களுக்கு அதிக கிராக்கி இருக்கின்றது. பதனிடும் பொருள்களில் முக் கியமானது ஆவாரம்பட்டை. அதிலுள்ள அதிகத் துவர்ப்புச் சத்து, தோலுக்குள் எளிதில் ஊடுருவிச் செல்லும். சென்னைக் காடுகளில் கிடைக்கும் வேறு பதனிடும் பொருள்கள் கொன்றைப்பட்டையும் கரு வேலம்பட்டையுமாகும். 466 சென்னை இராச்சியக் காடுகளில் பிரம்பு ஏராளமாகக் கிடைக்கின்றது. பிரம்பில் பலவகை உண்டு. அவற்றுள் நன்றாகப் பயன்படுவன மெல்லிய பிரம்பும் கனத்த பிரம்புமாகும். மெல்லிய பிரம்பு கயிற்றுக்குப் பதிலா கப் பெரும்பாலும் பயன்படுகிறது. ஏராளமாகப் பிரம்பு கிடைக்கும் இடங்களில் பெரிய மரங்களை இழுத்துச் செல்லவும், தெப்பங்களைக் கட்டவும் பயன்படுத்து கிறார்கள். பிரம்பு கூடை முடையவும், வேலி கட்டவும், குடைக்காம்பு, கைத்தடி, மேசை, நாற்காலி முத லியவை செய்யவும் பயன்படும். சிறு பிரம்பு சித்திர வேலைப்பாடுகளுக்கும், அழகிய சன்னற் கதவுகள், கட் டில், நாற்காலி முதலியவற்றின் பின்னல் வேலைக்கும் பயன்படுகிறது. தென் கன்னடம், கோயம்புத்தூர், பாலக்காடு முதலிய பிரதேசங்களில் பிரம்பு மிகுதியாகக் கிடைக்கிறது. காய்ச்சி வடிக்கும் பொருள்கள் : வாணிகத் துறை யில் பெயர்பெற்ற ஐந்து வகையான வாசனைத் தைலங் கள் உண்டாகும் புல் வகைகள் காடுகளில் விளைகின் றன. அவை 'காசிபோதை' என்னும் தாரிப்புல்லும், வெட்டிவேருமாகும். எலுமிச்சம்புல்லும் காசிபோதை என்னும் புல்லும் தென்னிந்தியாவில் மிகுதியாகக் கிடைக்கின்றன. புல் தைலம் இறக்கும் தொழிலும் இந்தப் புல் நன்றாக விளையும் இடங்களில் நடந்து வரு கிறது. இந்த வாசனைத் தைலங்கள் உணவுப்பொரு ளுக்கு ஊட்டவும், சோப்பு முதலியன செய்யவும் பயன் படுகின்றன. மரத் தைலங்களில் வாணிக முறையில் சந்தன எண்ணெயே முக்கியமானது. ஆண்டுதோறும் சந்தனமரத்திலிருந்து ஏறக்குறைய 17 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரூபாய் வருமானம் சென்னைக் காட்டிலாகா வுக்குக் கிடைக்கிறது. இங்குச் சந்தன மரம் உள்ள காடுகள் முக்கியமாகச் சேலம், கோயம்புத்தூர், தென் கன்னடம், நீலகிரி, வட ஆர்க்காடு முதலிய மாவட்டங் களில் இருக்கின்றன. இந்தியாவுக்குள்ளே பயன்படும் சந்தனமரம் சிறிதளவே; வெளிநாடுகளுக்கு இது மிகுதியாக ஏற்றுமதியாகின்றது. வாசனைத்தைலம், சோப்பு, மருந்து வகைகள் செய்யச் சந்தனத்தைலம் மிகவும் பயன்படுகிறது. அதற்கடுத்தபடியாகக் சொல் லக்கூடியது, எண்ணெய் மரம் (Dipterocarpus) என் னும் மரத்திலிருந்து எடுக்கும் தைலமாகும். இது தென் கன்னட மாவட்டத்தில் சிறிதளவிலே கிடைக்கின்றது. மரத்தைப் பாதுகாக்கும் மெருகாக இந்த எண்ணெய் பயன்படுகின்றது. யூக்கலிப்ட்டஸ் என்ற மரத்தின் இலைகளிலிருந்து காய்ச்சி வடிக்கப்படும் தைலம் சென்னைக் காடுகளில் கிடைக்கும் பதனிட உதவும் கனிகள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இங்கிக் காய் என்னும் தீவிதிவிக்காய் முதலியன ஆகும். இவற் றுள் மிக முக்கியமானது கடுக்காய். ஏறக்குறைய 400 டன் கடுக்காயும், 30 முதல் 40 டன் நெல்லிக்காயும், மற்றப் பழங்கள் மிதமான அளவிலும் இந்தக் காடுகளில் கிடைக்கின்றன. மதுரை, கோயம்புத்தூர், சேலம் முதலிய மாவட்டங்களில் கடுக்காய் வெகுவாக விளைகின்றது. வகைகள் நச்சு வகை கள் : பெருவாரியான மூலிகைகளும், மருந்துப்பொருள் களும் சென்னைக் காடுகளில் கிடைக்கின்றன. வேர், பட்டை, இலை, கனி இவற்றினின்றும் கிடைக் கின்றன. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மூலி கைகள் ஏராளமாக ஏற்றுமதியாகின்றன. காட்டில் உண்டாகும் வாசனைத்திரவியங்களாகிய ஏலம், மிளகு, இலவங்கம் முதலியன இந்தியாவில் பயன்படுவதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உண் வுக்கு உதவும் கனிகளும் மற்றப் பொருள்களும் காட் டில் நன்றாகப் பயிராகின்றன. உணவுப்பொருள், அவை நச்சு மூலிகைகளும் மற்றப் பொருள்களும் சென்னை இராச்சியக் காடுகளில் நிறைய விளைகின்றன. அவற்றுள் எட்டிக்கொட்டையைச் சிறப்பாகக் கூறலாம். காரணம் என்னவெனில் எட்டியிலிருந்து 'ஸ்ட்ரிக்னீன்' (Strych. nine), 'புரூசீன்' (Brucine) என்கிற இரண்டு நச்சு மருந்துகள் கிடைக்கின்றன. அவை பல நோய்களுக்குச் சிறந்த மருந்தாகின்றன. விலங்கு தரு பொருள்களும் தாதுப்பொருள்களும்: விலங்கு தரு பொருள்களில் முக்கியமானவை அரக்கு, தேன், மெழுகு, பட்டு, கொம்புகள், தோல், எலும்பு, தந்தம் முதலியன. இவற்றிலிருந்து நல்ல வருவாய் கிடைக்கின்றது. ஆண்டுதோறும் ஓர் இலட்சம் இராத் தல் தேன் இங்குக் கிடைக்கிறது. அரக்கு மிகப் பழைய காலத்திலிருந்தே இந்தியாவில் இயற்கையாக விளைந்து வந்தபோதிலும் சில காலத்