பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமாத நட்பு 79

அவ்வளவுக்கவ்வளவு கல்லதென்று தோன்றியது. வீட்டிலும் அப்படித்தான்் அபிப்பிராயப் பட்டார் கள். ஆகையால் பழையபடியே நீங்கள் வாருங் கள். இந்த இரண்டு நாளும் பாடம் இல்லாமற். போனலும் பரவாயில்லே. குட்டிக்கு லீவு விட்டது போல் ஆயிற்று' என்று சொன்னர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது' என்றார்,

மறுபடி வாத்தியார் தம் சிஷ்யைக்குப் பாடஞ் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினர். இரண்டுநாள் கழித்து நீங்வாஸையர் எங்கள் வீட்டுக்கு வந்தார். 'முதல்தரமான பொருத்தம். இதைக்காட்டிலும் வேறு ஜோடியே இணையாதென்று ஜோஸ்யர் சொல்லிவிட்டார்” என்றார். அவர் தெளிவாகப் பேசாவிட்டாலும் எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. நானும், 'பார்க்கிறேன்' என்று சுருக்கமாக விடை கூறி அவரை அனுப்பினேன். என் குமாரனுக்கு வேறு ஓர் இடத்தில் விவாகத்திற்கு ஏற்பாடு ஆகிக்கொண்டிருந்தது.

ஆனி மாதம் கடைசிவாரம் ரீநிவாஸையர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்பொழுதுதான்் என் பிள்ளைக்குப் பெண் கொடுப்பதாக ஏற்பாடுக ளெல்லாம் ஆகி முகூர்த்தம் எப்போது வைத்துக் கொள்ளலாமென்று கேட்பதற்கு, ஸம்பந்தியாக வரப் போகிறவரும் வந்தார். அச்சமயம் நீநிவாஸையர், 'என்ன, பார்த்திர்களா?’ என்று உத்ஸாகத்தோடு கேட்டுக்கொண்டே வந்தார்.

"உட்காருங்கள். இவர்களைத் தெரி யு மோ? இவர்கள் எனக்கு ஸம்பங்தியாக வரப்போகிறவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/87&oldid=686249" இலிருந்து மீள்விக்கப்பட்டது