உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 11 தி்ல் வந்து சேருகிறேன். அமெரிக்காவில் விஞ்ஞானக் கூடங்கள் பலவற்றையும் கண்டேன். அவைகளின் சிறப் புக்களை நேரில்தான் விளக்கவேண்டும். தங்கள் அன்பு மறவாத, மு. கருணாநிதி. தடை நீக்கி-படை நல்கும் பெருநூல்- இராவணகாவியம்! உவமை : 1. 'பழமையை அழித்துப் புதுமையைப் 6 படைக்கும் யாவான்.... புத்துலகச் சிற்பி கவிஞனே 2. செந்தமிழ்ச் சொற்கள் தீப்பந்தங்களாகவே மாறிச் சுடுகின்றன. 3.போர் எழுச்சிப் பாடல்கள், உன்னத நயம்: எரிமலை வெடித்து கக்கும் தீப்பிழம்பாகவே மாறி விடுகின்றன...' காலத்திற்கும் கருத்துக்கும் ஒவ்வாதன வற்றை- முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்க வழக்கங் களை- பழமையை அழித்துப் புதுமையைப் படைக்கும் புத்துலகச் சிற்பி கவிஞனேயாவான். உண்மையான* கவிஞன் பண்பாட்டின் சின்னமாகப்-பண்பாட்டின் கருவூல மாக - விளங்குவான்.. தமிழகத்தைப் பொறுத்தவரை, கவி ஞர்களுக்கு நீண்ட நெடுநாள் பாரம்பரியமுண்டு; மரபுண்டு. தமிழ்மொழி காலத்தாலும் கருத்தாலும் மூத்தமொழி. அது, 'முன்னைப் பழமைக்கும் பழமையதாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய்த்' திகழும் பொற் புடைய மொழி; காலத்தால் முதுமையெய்தாக் கட்டழகு வாய்ந்த மொழி 0