உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 'முதுகில்' என்றான். கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள் வாளை எடுத்தனள். முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம். கோழைக்குப் பால் கொடுத்தேன்- குப்புற வீழ்ந்து கிடக்கும், மோழைக்குப் பெயர் போர் வீரனாம். முன்பொருநாள் பாய்ந்து வந்த ஈட்டிக்கு பதில் சொல்ல மார்பைக் காட்டி சாய்ந்து கிடந்தார், என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா! அடடா! மானமெங்கே! அறுத்து எறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை! "மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை; மகன் பிறந்தபோதும் மகிழ்ச்சிக்கு உவமை : எல்லையுண்டு. உன்னத நயம்: குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்துபட்டான். இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் வீணை நரம்பினிலே இசை துடிக்கும்! அதுவும் மானம் மான மென்றே முழங்கும். மதுவும் சுரரவும் உண்டு வாழும் மானமற்ற ஆரியத்தின் வம்சமா நீ? ஏடா? மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய். தின்று கொழுத்தாய், திமிர் பாய்ந்த தோள்கள் எங்கே? தின வெடுக்க வில்லையோ; அந்தோ! என்று கதறினாள், எண்பதை நெருங்கிய ஏழைக்கிழவி, சென்றங்கு செருமுனையில் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள் அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று இரத்த பிணக் குவியலிலே பெருமூச்சு வாங்க வெள்ளம் நடந்தாள்