உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 / கலைஞர் கடிதம் 6 6 "ஆகா! நாங்கள் அப்போதே 'தமிழ்நாடு' என்றபெயரை வைப்பதற்கு ஆதரவாளர்களாக இருந்தோம் என்று காங்கிரசார் எழுதுவதும் பேசுவதும் எவ்வளவு பெரிய ஏமாற்றுவித்தை என்பதை எண்ணிப் பார் நண்பா! . ஆக; இந்த அளவோடு 1961 பிப்ரவரி 24ந்தேதியன்று தமிழ் மக்களின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட் டார்கள். தி. மு. கழகம் போன்ற சட்டசபைக் கட்சி களின் ஏகோபித்த குரல் எள்ளி நகையாடப்பட்டு; தமிழ ரசுக் கழகத்தினர் நடத்திய போராட்டம் கேலி செய்யப் பட்டு; சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் அலட்சியப்படுத் தப்பட்டு; அவரது சாவு சாதாரணமாகக் கருதப்பட்டு; காங்கிரசார், தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று அடம் செய்து எட்டேகால் லட்சணங்களாய் காட்சியளித்தனர். அரங்கண்ணல் தீர்மானம் அதற்குப் பிறகு, 1962 பொதுத் தேர்தல் முடிந்து சுப்பிரமணியம், டெல்லி மந்திரியாகப் போய்ச் சேர்ந்தார். கழகத்தினர் ஐம்பது பேர் நாவலர் தலைமையில் சட்ட சபையில் நுழைந்தனர். 1964-ஆம் ஆண்டு, ஜனவரி24 ஆம் நாளன்று தமிழக சட்டமன்றத்தில் திரு. இராம. அரங்கண்ணல் அவர்கள் 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது அரங்கண்ணல் பேசியதைக் காங் கிரஸ் நண்பர்களுக்கு நினைவூட்ட வேண்டியது மிக அவசியமாகும். “இந்தத் தமிழ் நாடு பெயர் மாற்றக் கோரும் தீர்மானம் 1961 ஆம் ஆண்டு இதே மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 6ந் தேதியன்று டெல்லி