உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்திருமனின் 'கருத்து' கலைஞர் கடி தம் / 111 இத்தனைக்கும் பிறகு தான் நண்பா; நமது ஆட்சி வந்த பிறகு-அண்ணன் அரியாசனம் ஏறிய பிறகு-தமிழன் னையைச் சரியாசனத்தில் அமர்த்த-1967 ஜூலை 18 ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில் தமிழர்களின் நெடு நாளைய கனவு நிறைவேறுகிறவகையில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை அண்ணா அவர்கள் முன்மொழிந் தார்கள். அப்போதுகூட காங்கிரஸ் தலைவர் கருத்திருமன் என்ன பேசினார்? "தமிழ் நாடு-மெட்ராஸ் ஸ்டேட் என்று இரண்டும் இணைந்திருக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டு ‘தமிழ் நாடு' டு எனப் பெயர் சூட்டுவதை பெருமதிப்புடனும் ஆர்வத்துடனும் வரவேற்கிறேன்.” என்று தான் கருத்திருமன் கருத்தறிவித்தார். டெல்லியிலும் 'தமிழ்நாடு' பெயரை அங்கீகரித்து அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து நமது பெரு விருப் பத்தை ஒருமன தாக நிறைவேற்றியிருக்கிறார்கள். அதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டிய காங்கிரசார், மாறாக நம்மீதும், ம. பொ. சி. மீதும் மாடு போல் முட் டத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் நாடா? தமிழகமா? தமிழ் நாட்டரசா? தமிழக அரசா? க ஆகா! குழப்பம்! ஓகோ! குழப்பம் !