உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிதாபப்படுகிறேன்! பழைய நண்பா! நீ என்னை இன்று வசைபாடித் திரியும்போது- முதலில் நீ என்னைப் புகழ்ந்து பேசியதையும் பாராட்டி நினைத்துப் பார்த்து மகிழ்ந்து எழுதியவைகளையும் கொண்டிருக்கிறேன். நீ இப்போது சிலரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும்போது, அவர்களையே ஒருகாலத்தில் நீ தரக்குறைவாகத் தாக்கிப் பேசியதையும், எழுதியதையும் எண்ணிப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நீ என்னைக் குமுற வைக்கலாம், அழவைக்கலாம் என்று எண்ணி ஏமாந்துவிடாதே! சிரங்கு பிடித்தவன் அழுத்திஅழுத்தி—கையை மாற்றி மாற்றி - முரட்டுத் தனமாகச் சொறிந்து கொள்வதிலே ஒரு தனி இன்பம் காண்பான். ஆனால் அந்த இன்பம் சில விநாடிகளுக்குத்தான். சொறிந்த இடத்தில் ரணம் ஏற் பட்டு எரிச்சல் எடுக்கும் போதல்லவா தெரியும் வேதனை, என்னை நீ தாக்கும் போது உன் மனப்புண்ணை குரங்குப் புண்ணாக ஆக்கிக் கொள்கிறாயே என்பதற்காகப் பரிதாபப் படுகிறேன். - ஆண்டாண்டு காலமாக அரசியல் மாச்சரியங்கள்- கொள்கை முரண்பாடுகள்- இலட்சிய வேறுபாடுகள்- செயல்முறைத் தகராறுகள் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.