உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியும் மொரார்ஜி தேசாயும்! நண்பா, “இந்திக்கு எதிர்ப்பு காணப்படும் அதே நேரத்தில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற இந்தி பேசா மாநிலங்களில் இந்திப் பிரச் சாரம் வெற்றிகரமாக நடப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.” - துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்தியைப் பரப்புவதில் எத்தனை தீவிரம் காட்டுகிறார் பார்த்தாயா? இந்தி பேசாத மாநிலங்களில் இந்திப் பிரச்சாரம் வெற்றி கரமாக நடப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறாராம். அவர் தி.மு.கழகத்தின் மீது எப்போது பார்த்தாலும் எரிச்சலைக் கக்குவதின் உள்நோக்கம் உனக்கு இப்போது புரிந் திருக்குமே! இந்திக்கு இங்கு இடமில்லை எனச் செய்த தமிழக அரசை ஆளும் தி. மு. கழகத்தை எப்படி நண்பா அவரால் பாராட்ட முடியும்? தி.மு. கழகம், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை -என கூச்சல் எழுப்பும் எழுப்பும் காங்கிரஸ்காரர் களுக்கு மொரார்ஜியின் பேச்சு தகுந்த விளக்கமாக அமையும் என்றே கருதுகிறேன்.