உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 / கலைஞர் கடிதம் வர்கள் எனப் பாராட்டுகிறார்கள். ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டுமானால் இதுபோன்றவைகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என காங்கிரஸ் தொண்டர் கள் எடுத்துக்கொண்டு அடுத்துவரும் இடைத் தேர்தல்களி லும் இதே முறையைப் பின்பற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கொண்டாடும் விழா வழி வகுத்துவிடும் என்பதை பொறுப்புள்ள தலைவர்கள் உணரவேண்டும். அராஜகமும் - வெறியாட்டமும் நடத்தி தேர்தல் நடத்தி விட்டு சுப்பிரமண்யம் நாள் தவறாமல் பத்திரிகை நிருபர் களைக் கூட்டி வைத்து-தி. மு. கழக அரசு அதிகார துஷ் பிரயோகம் செய்ததாகவும்- காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறி வந்தார்; கூறியும் வருகிறார். அந்தச் செய்தியைப் பெரிதுப்படுத்தி வெளியிட்டு தங்களது உண்மை சொரூபத்தை பல பத்திரிகைகள் காட்டிக் கொண்டன. அவர்கள் ஆட்சி பீடத்திலே இருந்தபோது நடந்த தேர்தல்களை நினைத்துப் பார். எந்த ஒரு தேர் தலாவது நமது தோழர்கள் நூற்றுக்கணக்கானவரை சிறையில் வைக்காமல் நடத்தியதாக வரலாறு உண்டா? ஆனால் நாகர்கோவில் தேர்தல் நடந்தபோது கலவரம் நடத்தியதால்-கல்லெறிந்ததால்-அமைச்சர்கள் இருந்த விடுதியை சூழ்ந்து தாக்க முயற்சித்ததால் கைது செய்யப் பட்ட அத்தனை காங்கிரசாரும் தேர்தலுக்கு முன்னால் பொறுப்பில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதிகார துஷ்பிரயோகம் என்றால் அத்தனை பேரையும் உள்ளே அடைத்து வைத்து-காங்கிரஸ் பாணியில் தேர்தல் நடத் தியிருக்கலாமே! நாகர் கோவில் தேர்தலில் காங்கிரசார் நடந்து கொண்டவிதத்தை 'இந்து' இதழில் திருவனந்தபுரத் தைச்சேர்ந்த ஹண்டே என்பவர் எழுதிய கடிதம் தெளிவாகக் காட்டுகிறது.