உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 / கலைஞர் கடிதம் கப்பட்டிருந்த வகுப்பு விரோதம் இப்போது வளர்ந்து பெரிய மரமாகி விட்டது. இந்த நச்சு சூழ்நிலை மாறு வதற்கு நெடுநாட்களாகும். நீண்ட தூரத்திலிருந்தெல் லாம்கூட பணம் வந்து ஆறாகப் பாய்ந்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் லாரிகள்வந்தவண்ணமாயிருந்தன. இவை முடிவேயில்லாத நீண்ட வரிசையில் ஊர்வலம் போல செல்வதைக் காண்பது ஒரு காட்சியாகத்தானிருந் தது. ரஷ்யாவின் ராட்சஸ டாங்கிகள் நுழைந்து ஆக் கிரமித்தபோது செக்கோஸ்லோவேக்கியா இருந்ததைப் போல -நாகர்கோயில் சக்தியற்று இருந்தது. "கூட்டணியைச் சேர்ந்த எந்தக் காரும் லாரியும் நகரக்கூட முடியவில்லை. "கூட்டணியைச் சேர்ந்த கார் எங்காவது ஒன்று நகர்ந்தால் காங்கிரசைச் சேர்ந்த நான்கு வண்டிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும். முதிர்ந்த காங்கிரஸ்காரர் கள் கூட போலீசையும் அதிகாரிகளையும் நாள் தவறாமல் குற்றம் கூறிப் பேசியது வருந்தத்தக்கது. போலீஸ்காரர் களும் அதிகாரிகளும் கடந்த 30 ஆண்டுகளாக காங்கி ரசின் அதிகாரத்தின் கீழேயே இருந்து வந்தவர்கள்.இன்று காங்கிரஸ்காரர்கள் கூறுகிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால்-அவர்கள் தங்கள் கீழ் உள்ள அதிகாரி களுக்கு எத்தகைய பயிற்சியைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. "இது ஒருபுறமிருக்கட்டும். போலீசாரின் நடத்தைக் காக அவர்களையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலையும் பாராட்டத்தான் வேண்டும். “கூட்டணி ஆதரவாளர்களுக்கு சாதாரணமான பாதுகாப்பைக் கூட அவர்கள் வழங்கவில்லை. இதற்காக வேண்டுமானால் குற்றம் சொல்லலாம்.