உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 | கலைஞர் கடிதம் என்று மூலைக்கு மூலை தட்டி கட்டித் தொங்க விட்டனர். "தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால்தான்; தி.மு.க. ஆட்சி காவிரித்திட்டம் கொண்டுவருகிறது! அதுவும் ஒரு கேடா என்றால்; நாடு-"ஏடா!மூடா! என்று நகைக்காதோ?" என வினா மூலம் விடையிறுத்துக் காங்கிரஸ் நண்பர்களுக்கு அறிவு புகட்டிவிட்டனர் வாயிலாக! அற்புதமான தீர்ப்பின் அம்மவோ! என்னென்ன வசை மொழிகள்! எத்துணை தரக்குறைவான தாக்குதல்! "இறந்துபோன தேவதாசுவின் உயிரை விட அண்ணா துரையின் உயிர் எந்த வகையில் மேலானது .. என்று ஒரு காங்கிரஸ் ஏடு கர்ண கடூரமாக எழுதியது; அதைப் படித்து சுப்பிரமணியமே கூட கண்கலங்கிவிட்டா ராம்! என்ன செய்வது; அவரால் அதையெல்லாம் கண்டிக்க முடியுமா என்ன? அதைச் செய்தால் அவர் பாடே ஆபத்து! வேடிக்கை தெரியுமா அண்ணா! கல்கிகூட 'கார்ட்டூன்' போட்டது- சாக்கடை நாற்றத்தில் ஒரு வேட்பாளர் மூக்கைப் பிடித்துக் கொண்டே ஓட்டுக் கேட்கிறார். குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக வருகிறது. அந்த சொட்டுத் தண்ணீருக்கு நாக்கை நீட்டிக்கொண்டு ஒரு 'கியூ' வரிசையே நிற்கிறது. கொசுக்கடி பொறுக்க முடியாமல் வேட்பாளர்கள் கொசுவலையை நடமாடும் கூடாரமாக்கிக் கொண்டு அதற்குள்ளிருந்தவாறு ஓட்டுக் கேட்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/32&oldid=1691847" இலிருந்து மீள்விக்கப்பட்டது