உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 / கலைஞர் கடிதம் அவர்களின் துரோகத்தால் நீ வெற்றி பெற முடி யாமல் போய்விட்டது. நீ, தோல்வியால் துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடமாட்டாய் என்பதை நான் அறிவேன். காஞ்சி மண்ணில் நமது அண்ணன் தோல்வி கண்ட போது என்ன சொன்னார் 1962 ல்! "நான் தோற்றதாக எண்ணவில்லை. ஐம்பது பேர் உருவிலே நான் சட்டமன்றத்திற்குச் செல்வதாகவே கருது கிறேன்" இப்படிச் சொன்னவருக்குத் தம்பியப்பா நீ! 67 ல் ஆட்சிப் பொறுப்பைப் பறி கொடுத்துவிட்டு- 66 “அய்யோ போச்சே! அம்மா போச்சே! அந்தஸ்து போச்சே! ஆடம்பரம் போச்சே! பதவி போச்சே! பவிஷு போச்சே!” என்று அலறிக் கொண்டு கிடக்கிறார்களே; மாஜி மந்திரிகள் சிலரும்-காலமெல்லாம் பதவியில் இருப்போம் எனக் கனவு கண்டு கவிழ்ந்துவிட்ட பலரும்-அவரைப் போன்ற எரிச்சல் உள்ளமா உனக்கு? ற இல்லை! இல்லை! எழுச்சி உள்ளம் படைத்தவன் நீ! உன் தோல்விக்காகக் கவலைப்படுவதை மறந்து விட்டுத்தோல்விக்கான காரணங்களை சிந்தித்துப்பார். அந்த வீதியில் நூறு ஓட்டு போய்விட்டது. இந்த வீதியில் எழுபது ஓட்டுக்களை அழைத்து வராமல் விட்டு விட்டோம். இவைகள் பேசத் தக்க காரணங்கள் என் பேசிக்கொண்டேயிருக்கக்கூடிய காரணங்கள் றாலும் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/42&oldid=1691857" இலிருந்து மீள்விக்கப்பட்டது