உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 57 பத்திரிகை வீசிய வலையில் நீயும் விழுந்து விட்டாய்! மேயராக வருவதற்கு நீ தகுதி இல்லாதவன் அல்ல! ஆனால் அந்த ஆசையையே வரவழைத்துக் கொள்ளாமலிருந் தாய், அதற்குள் பத்திரிகையாளர் உன் உறுதியை சோத னைக் களத்துக்கு அனுப்பி விட்டார். ஃ பதவிகள் கூடா தென்பதல்ல என் வாதம் பதவிகள், பணிபுரியும் வாய்ப்புக்கள். பதவியின்றிப் பணி புரிவது- ஃ பதவியைப் பணிபுரியும் வாய்ப்பாக ஆக்கிக்கொள்வது- இந்த இரண்டில்; முதலாவதை நாமே தேடிச் செல்லலாம். இரண்டாவது வகையிருக்கிறதே; அது நம்மை நாடி வர வேண்டும். நாமே அதனைத் தேடிச் சென்றால்; பணிபுரியும் நோக்கம் மறைக்கப்பட்டு பதவி விரும்பும் நிலைமை மட் டுமே கண்ணுக்குத் தெரியும். இந்த அசைக்க முடியாத மனதிடத்துடன் இருப்பாய் என்று உன்னை நினைத்தேன்; ஆனால் உன்னையும் 'பதவி' பற்றியிருக்கிறது-பத்திரிகைகளின் தூபத்தில் நீயும் மயங்கி விட்டாய் என்கிறபோது என் வேதனை தாள முடிய வில்லை. மேயர் பதவி மட்டுமல்ல; எந்தப் பதவியானாலும்’ எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக் கடி கொடுத்துப் பெற முனையும்போதோ அல்லது பெற்று விட்ட பிறகோ- உன்னைப்பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும்! உனக்குத் தோன்றுகிறதோ இல் லையோ; நாட்டுக்குத் தோன்றும்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/69&oldid=1691884" இலிருந்து மீள்விக்கப்பட்டது