உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 / கலைஞர் கடிதம் படு அண்மைக் காலத்தில் நடைபெற்ற அரசியல் கொலைகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டேன். இதோ நிக்சனுக்குக் குறி வைத்துவிட்டார்கள்; அயூப்கானுக்கும் ஆபத்து நெருங்கி அகன் றிருக்கிறது. அரசியலில் இப்படிப் பட்ட பெருந்தலைவர்கள் மீது நடத்தப்படுகிற வன்முறை பாய்ச்சலேயன்றி, கட்சிகளின் முன்னோடிகள் தொண்டர் கள் மீதும் வன்முறைப் பேயாட்டங்கள் நடைபெற்றிருக் தி.மு. கழகத்தையே எடுத்துக் கொண்டால்; உடையார்பாளையம் வேலாயுதம் கின்றன தூத்துக்குடி கே.வி.கே.சாமி தூத்துக்குடி தாளமுத்து வடசென்னை பாண்டியன் நெல்லிக்குப்பம் மஜீது கோவை ஆரோக்யசாமி மயிலாடி மாரியப்பன் ஆலந்தூர் சின்னான் ஆலங்குடி சிதம்பரம். இப்படிப் பல கண்மணிகள் படுகொலைக்கு ஆளாகியிருக் கிறார்கள். கழகத்திற்கு மட்டுமன்றி; வேறு சில கட்சிக ளுக்கும் இப்படிப்பட்ட இழப்பு உண்டு. கொலை வெறி அளவுக்குப் போகாவிட்டாலும்; ரத் தக் காயங்களை உருவாக்கும் வகையில் தாக்குதல்-வெட்டு தல்-அடித்தல்-போன்ற வன்முறைகளால் தங்கள் அரசி யல் பகைமையைத் தீர்த்துக்கொள்ள முனைகின்றவர்களும் அரசியலில் இருக்கிறார்கள். கருத்துக்குக் கருத்து மோதி-ஜனநாயக ரீதியில் மக் கள் மன்றத்தின் செல்வாக்கைப் பெற்று-மாற்றுக் கட்சி யையோ அல்லது அதன் தலைவரையோ, வெற்றி காண்பது தான்; வளர்க்கப்பட வேண்டிய அரசியல் பண்பாடாகும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/72&oldid=1691887" இலிருந்து மீள்விக்கப்பட்டது