உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 71 மக்கள் வயிற்றில் அடிக்கப்பட்டாலும் பர வாயில்லை; அரசாங்கத்தின் கொள்முதல் வேலைக் குத் தடங்கல் ஏற்பட்டால்; அதுவே தங்களுக்கு திருப்தி. இது தான் காங்கிரசாரின் லட்சியம்! அவர்கள் களிப் புக்குக் காரணமும் தெளிவாகப் புரிகிறது! போட்டார்கள் கொள்முதல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயிருந்து நடந்து வருகிறது! இப்போது தரப்படுகிற விலைதான் அப்போதும் தரப்பட்டது! காங்கிரசார் ஆண்டபோதும் கொள்முதலை எதிர்த்துச் சில நிலவேந்தர்கள் வழக்குப் தடை வாங்கினார்கள. அப்போதெல் லாம் தி. மு. கழகத்தினரோ கழக ஏடுகளோ; அதனை நிலப் பிரபுக்களின் வெற்றியாகக் கொண்டு கூத்தடிக்கவில்லை. கொள்முதல் விஷயத்தில் அரசாங்கம் மேலும் தீவிரமாக இருக்க வேண்டுமென்றுதான் அப்போது கழகத்தினர் வற்புறுத்தினர். இன்றைய காங்கிரசாரோ; எப்படியாவது கழக அரசைக் குறை கூற வேண்டுமென்ற இழிந்த நோக்கத் தில் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம் கூட உண்டு நண்பா! மத்திய அரசில், காங்கிரசார் இல்லாமல் மாற்றுக் கட்சியின் ஆட்சி நடைபெற்று; அந்த வேளையில் சீனாக் காரனோ; பாகிஸ்தானோ படையெடுத்தால்கூட; இங்குள்ள காங்கிரசார் அந்தப் படையெடுப்பைப் பாராட்டிப் பள்ளுப் பாடுவார்களோ; என்னவோ! அந்த அளவுக்கு எதிர்க் கட்சிகளின் களுக்குக் காய்ச்சல் இருக்கிறது. மீது அவர் இதோ நவசக்தி; (16-11-68) யில் வெளி வந்துள்ள கொட்டை எழுத்துச் செய்தியைப் பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/83&oldid=1691898" இலிருந்து மீள்விக்கப்பட்டது