உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 81 இந்த முத்தான வார்த்தைகளை வடித்தெடுத்து வாரித் தெளித்துக் கொட்டை எழுத்துக்களில் விளிம்பு கட்டிப் போட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் ஒரு மாலை ஏடாகும். வேங்கை, வேதாந்தம் பேசிக் கேட்டிருக்கிறாயா? கேட்டிருக்கமாட்டாய்! கேட்டிருக்க முடியாது! ஆனால், இதோ அரசியலில் அந்த அற்புதம் நிகழ்கிறது! 'கனிவு' என்ற தலைப்பில் கரடியார் பேசுகிறார். காட் டில் காண முடியாத விளம்பரத்தை, நாட்டில் காணு கிறோம் இப்போது! காங்கிரசில் ஜமீன்தார் ஜாகீர்தார் இல்லையாம்- மிட்டாமிராசுகள் கிடையாதாம்-ஆலை அரசர்கள், பண முதலைகள் அறவே இல்லையாம்! "காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் ராஜா முத்தையா செட்டியார்; பாவம் காலையிலே கிளம்பி வேலைக்குச் சென்று நாளெல்லாம் அலைந்தால்தான் ஏதோ ஒரு நாளை நகர்த்தலாம்! “புதுக்கோட்டை ராஜா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரும் அப்படியே! 'பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ஒரே ஒரு ஓட்டை லாரி! ஒரே ஒரு தள்ளு மாடல் பஸ்! இந்த இரண்டும் தான் அவரது குடும்பத்தைக் காப்பாற்றுகிறது—அவரும் பாவம்; மிகமிக ஏழை!” “வடபாதிமங்கலத்தாருக்கு; ஏதோ, ஒரு காணியோ, ஒன்றரைக் காணியோ தரிசு நிலம் கிடக்கிறது! அதற்குத் தண்ணீர் கூடப்பாய்வதில்லை. அவ்வளவு கஷ்டமான குடும்பம் அவருக்கு!' "ராஜம் 5-6 - ராமசாமி - ஒயர்மேனாக ஹாஜா ஷெரீப்பு துறைமுகத் தொழிலாளி!" இருக்கிறார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/93&oldid=1691909" இலிருந்து மீள்விக்கப்பட்டது