உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“இருப்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா!” உடன்பிறப்பே, “பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்! எனப் பாவேந்தரின் கவிதை வரிகளாலேயே, கழகத்தின் கண்மணியே! உன்னை நான் இரு கையேந்தி அழைத்து மகிழ்கிறேன். ஓராண்டு காலம் உன்னையும் என்னையும் மறைத்து நின்ற வானுயர்ந்த சுவர்களை விட்டு வெளியில் வந்து விட்டாய்! உன்னுடன் உள்ளே அடைபட்டவர்களில் இருவர் உறங்கிடும் கண்களுடன் வெளியே வந்தனர். ஆம். என்றுமே விழித்துப் பார்க்க இயலாத விழிகளுடன், காற்றை உள்ளே இழுத்து வெளியே விட முடியாத சுவாச கோசங்களுடன் வெளியே வந்து, குளிர்ந்து போன தங்கள் உடல்களுக்குத் தணலாடையைப் போர்த்திக்கொண்டு மண்ணோடு மண்ணாக மாறினர். இல்லை, இல்லை, எங்கள் கணணோடு ஒளியாகக் கலந் தனர். மூச்சோடு காற்றாக ஒன்றினர். இதய அசைவு களின் துடிப்பாக இணைந்தனர்.