உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 123 கட்சியிலிருந்தும் விலகி விட்டார். அவர் விலகியதுபற்றி எந்தக் கருத்தையும் கழகச் சார்பில் நான் அறிவிக்க வில்லை. அவர் விடுத்த அறிக்கைபற்றி நிருபர்கள் கேட்ட போது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள நருக்கடி நிலை நீக்கம்' பற்றிய கருத்துக்களும் கழகச் செயற்குழு தீர்மானங்களும் ஒன்றுக்கொன்று உடன்பாடானவைகள் என்று தெரிவித்தேன். ய உடனே ஆளுங் காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து அர்ச்சனை! அபிஷேகம்! எல்லாம் ஆரம்பமாகிவிட்டன. “காமராஜ் பெயரால் தனியாகக் கட்சி நடத்தியே தீருவேன் என்று வீராப்புப் பேசிய பி. ராமச்சந்திரன் சத்தமில்லாமல் சோரம் போயிருக்கிறார்" ச இந்திரா காங்கிரசின் பொதுச் செயலாளர்களிலே ஒரு ‘புண்ணியவான்'-எழுதியுள்ள வாசகங்கள் இவை! 6 காமராஜ் காங்கிரசில் இருந்தவர்கள், தி.மு.க.வுடன் தேர்தல் உறவு கொண்டால் அது “சத்தமில்லாமல் சோரம் போவது” என்று சொன்னால்; காமராஜ் காங்கிர சில் இருந்தவர்கள், நடிகர் கட்சியுடன் தேர்தல் உறவு கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களே தமிழ் நாட்டில்; அது "சத்தம் போட்டுக் கொண்டே சோரம் போவதா? என் று திருப்பிக் கேட்க எவ்வளவு நேரமாகும்? ஆளுங் காங்கிரசின் பொதுச் செயலாளர், தாழ்த்தப் பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிடும் ஜெகஜீவன்ராமைப்பற்றி எழுதியுள்ள வரிகளையும் படித்துப்பார். "தி.மு.க. பாசிஸ்ட் ஆட்சியின் கொடுமை களுக்கு நாம் ஆளானபோதெல்லாம் தமிழ