உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலைஞர் கறுப்புப் பணம் போன்றவைகளைக் களைந்திட, தொடர் புடைய அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும். ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் படம் எடுக்க உதவிப் பணம் தருகிறார்கள் என்றால்; அங்கே இதுவரை திரைப்படத்துறை வளர்ச்சி பெறவில்லை. அதனை ஊக்கப் படுத்திடத் தருகிறார்கள். தமிழகத்தில் திரைப்படத்துறை வளர்ச்சி பெற்ற ஒன்றாகும். நான் குறிப்பிட்டுள்ள சீர்கேடுகள், வரி ஏய்ப்புகள் அகற்றப்படுகிற அடிப்படையில் கேளிக்கை வரி சீரமைக்கப்பட்டாலே; இங்கும் அரசினரும், படத் துறையினரும் இழப்புக்கு ஆளாகாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படக் கூடும். 6 6 கழக அரசில்தான் “தற்காலிக நிரந்தர சினிமா தியேட்டர்கள்” கட்டுவதற்கான கடன் உதவிகள் தருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. எனவே, கழக அரசு திரைப்படத்தொழிலை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொள்ளவில்லை. கேளிக்கை வரி முதலியவற்றை சீரமைக்கக் குழு அமைத்திருப்பது ஒன்றே அந்தத் தொழில் அழியக்கூடாது என்பதில் கழக அரசுக்கு இருந்த அக்கறையையும், விட்டுக் கொடுக்கும் போக் கையும் நன்கு உணர்த்தும். இதையெல்லாம் மறைத்துவிட்டு; படத் துறையைப் பாழாக்கத் திட்டமிட்டேன் என்று என்னைப் பார்த்துப் படமெடுக்கிறார்களே நான் அவர்களைப்பற்றி என்ன சொல்ல! 562299 அன்புள்ள மு.க. 8-1-77