உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 105 இங்கிலாந்து நாட்டில் இருந்து கொண்டு இங்கிருக்கும் நம்மை ஆளுகிற ஐந்தாம் ஜார்ஜ் அல்லது ஆறாம் ஜார்ஜ் என்ற நினைப்பு! என் தந்தை ஒரு கதை சொல்வார். மகாவிஷ்ணு, பரமசிவனைப் பார்க்கப்போனாராம். அப்போது சிவனின் கழுத்தில் இருந்த பாம்பு, விஷ்ணுவின் வாகன மான கருடனைப் பார்த்து “என்ன கருடா; சுகமா?” என்று கேட்டதாம்? உடனே கருடன்; இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாருக்கும் சுகந்தான்” என்று பதில் கூறிய தாம். அதுபோல் இருக்கிறது நண்பர் ஜார்ஜின் கதை! 66 'சின்னாளப்பட்டியில் ஏழாயிரம் நெசவாளர்கள். அவர்களுக்குத் தி.மு.க. அரசாங்கம் முப்பதாயிரம் நூல் கார்டுகள் வழங்கியிருக்கிறது. மீதி இருபத்து மூவாயிரம் கார்டுகள் எங்கே? என்று ஒரு அதிர்ச்சியும் பரபரப்பும் நிறைந்த கேள்வி யைத் தோழர் ஜார்ஜ் கேட்டிருக்கிறார். இதுபோன்ற செய்திகளைக் கொட்டை எழுத்தில் வளியிடத்தான் சில ஏடுகள் துடித்துக் கிடக்கின்றனவே! செய்தியைப் பார்த்ததும் நானே திகைத்துப் போய் இலாக்காவிலும். அதிகாரிகளிடமும் விசாரித்தேன். சின்னாளப்பட்டியில் உள்ள நெசவாளர்களுக்கு (6908) ஆறாயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டு நூல் கார்டுகளே வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் மத்ய மந்திரி பேசியதாகப் பத்திரிகைகளில் வந்த செய்தி தவறு என்றும் தெரிய வந்தது. என்ன செய்வது; தவறுக்கு வருந்தித் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் சுலபத் தில் ஏற்பட்டுவிடுவதில்லை. சின்னாளப்பட்டி மட்டுமல்ல; திண் டுக்கல் தாலுக்காவிலேயே பனிரெண்டாயிரம் கார்டுகள் மட்டுமே தரப்பட்டிருக்கும்போது, சின்னாளப்பட்டிக்கு முப்பதாயிரம் நூல் கார்டு கொடுத்திருப்பதாக ஜார்ஜ், குற்றம் சாட்டியிருப்பது மிகக் கேவலமான அரசியல் பிரச்சாரம் என்றுதான் கூறவேண்டும்.