உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை! உண்மை!! உடன் பிறப்பே, அமெரிக்க நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட கென்னடி திடீரென வாஷிங்டன் நகரில் ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு நேரே தோன்றினார். அவரைக் கண்ட மக்கள் அப்படியே திகைத்துப் போய் ஒருக்கணம் நின்று விட்டனர். பிறகு அந்த மக்கள் சுய நினைவு பெற்று கென்னடியைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்து வாழ்த்து கீதம் இசைத்தனர். மறுபிறவி எடுத்து வந்த ஜனாதிபதி கென்னடியை சந்திப்பதற்கு நிக்சன் முதலிய வெள்ளை மாளிகை வாசிகள் அனைவரும் ஓடி வந்தனர். வண்ணம் பெரிய ஒரு பிறகு, வெள்ளை காரில் கென்னடியை நிக்சன் அழைத்துக் கொண்டு தன் மாளிகைக்குச் சென்றார். மின்னும் இருவரும், 'வாட்டர் கேட்’ விவகாரம் பற்றி சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சின்போது இடையிடையே மசால் வடையும் முறுக்கும் சாப்பிட் டார்கள். அப்போது தொலைபேசி மணி அடிக்கவே, அருகே இருந்த கென்னடி எடுத்து “ஹலோ" என்றார். 'அத்தான்! மை டார்லிங்! சுகமாயிருக்கிறீர்களா? உங்களைப் பிரிந்து என் உயிர் துடிக்கும் துடிப்பை யார் அறிவார் அத்தான்! பாலும் சுவைக்கவில்லை; பழமும் ருசிக்கவில்லை. படுக்கையில்