உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 141 . மணிக்கு டெல்லி வந்து “நாங்கள் நேற்று இரவு 10 சேர்ந்தோம். இன்று காலை 11 மணிக்கு, எனக்கு அரசியல் வாழ்வு தந்த என் அரசியல் தெய்வம் இருக்கும் கோபால வணங்கி, ராஜ்யசபையில் உறுசிமொழி என்றும் உங்கள் தொண்டன் புரம் நோக்கி எடுத்துக்கொண்டேன். நான்,' புரிகிறதா; யார் எழுதியது என்று? கோபாலபுரம் வீடு கோயிலாகத் தெரிந்தது! அதில் அரசியல் தெய்வமாக நான் தெரிந்தேன். இன்று அந்த நண்பருக்குக் கோபாலபுரம் வீடு ஒரு குப்பைமேடு! தெய்வம், அவர் காலில் மிதிபடும் ஒருகல்லாகிவிட்டது! பரவாயில்லை; குப்பை மேட்டில் நன்றி யுள்ள ஜீவன்கள் இருக்கும். நான்தான் சிலருக்குக் கல்லாகி விட்டேனே தவிர, என் நெஞ்சம் கல்லாகவில்லை! ஏமாற்ற, துரோகம் புரியக் கல்லாத நெஞ்சமிது! அதனால் கல்லாக வில்லை! போனது போகட்டும்! ஆனால், ஒன்று; சென்ற இடத்தி லாவது நன்றியோடு நடந்து கொள்ளப் பழகட்டும்! நாம் வளமாக இருக்கும்போது நம்மிடம் எத்தனைபேர் இருந்தார்கள் என்ற கணக்கைவிட, நமக்குத் தொல்லைகள் வரும்போது நம்மோடு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் ஒழுங்கான கணக்கு! அப்படி இருப்பவர்களை எண்ணி மகிழ்வோம்! அதுதான் நமது கழகத்தின் உண்மையான வலிவு- அந்த உறுதி உள்ள வரையில் நம்மை யாரும் அசைக்க முடியாது. அன்புள்ள, மு.க. 15-6-73