உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலைஞர் எரிச்சல்காரர்கள் சல்லடம் கட்டிப் புறப்பட்டு விட்டார் கள். இதுகள் நாடாளுவதா? என அன்று கேட்டவர்கள் இன்று பெரியதோர் யுத்த முஸ்தீபுகளைச் செய்து கொண் டிருக்கிறார்கள். பணத் திமிங்கிலங்கள் தங்கள் பைகளை அவிழ்த்து அவர்கள் காலடியில் கொட்டுகின்றன. சீமான் களின் வீடுகளில் பிற்போக்கு சக்திகளின் சதியாலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன! எது கிடைக்கும்? அதனை எடுத்து இவர்கள்மீது வீசலாம் என்று அகப்பட்டதையெல்லாம் நமக்கு எதிராகப் பயன் படுத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இருபதாண்டு காலம் அனுபவித்த “ராஜ வாழ்வு” பறி போயிருந்ததை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென்பதில் கொள்கைகள் எல்லாம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு ஜனநாயக சோசலிசம் சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்டுக் கிடக்கிறது. ஒரே குறிக்கோள் அவர்களுக்கு! விட்டன. தமிழகத்தில் தி. மு. க. ஆட்சியை ஒழித்துவிட வேண்டும். ஏன்? எதற்காக? இதுவரையில் அவர் களும் விளக்கமளித்ததில்லை. அவர்களுக்காக வாதாடுகிற சில ஏடுகளும் விளக்கமளித்ததில்லை. - - ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சட்டமன்றத்தில் எடுத்துரைத்து அதனைப் பின்னர் திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்கிற படலங்கள் பேரவைத் தலைவரால் மன்னிக்கப் படுகிற நிகழ்ச்சிகள் இவைகளில் அவர்கள் கதாபாத்திரங் இருந்திருக்கிறார்களேயல்லாமல்; கழகத்தை எதிர்த்து வாதாடிட வேண்டிய இடத்தில்; ஆம்; ஆட்சி மன்றத்தில் வாதாடி வென்றதில்லை. களாக -STO கொள்கைக் குழப்பங்களால் சிக்கித் தவித்து, எப்படியும் கொலு மண்டபத்துக்குள் மீண்டும் புகுந்திட வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/26&oldid=1692003" இலிருந்து மீள்விக்கப்பட்டது