உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 53 துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டுவிட்ட தோழர் களுக்காக, நான் மனம் பதறினேன். இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்தேன். நாடே வன்முறைச் செயலைக் கண்டித்து நிற்கிறது! ஆனால் நாடாண்டு அனுபவம் பெற்ற நமது பெருந்தகையாளர் காமராசரின் நாக்கு, வன்முறைக்கு எதிராக அசையவே இல்லையே; பார்த் தாயா? நேற்று மாலை கூட அவர் தலைமையிலே சென்னையிலே ஊர்வலம்! ஆமாம் மௌன ஊர்வலம்! இந்திரா காங்கிரசாரும்; ா இந்திய கம்யூனிஸ்டுகளும்; மன்றாடியார் குழுவினரும்- விதைத்து, அறுத்து, களத்திலே கொட்டிய நெல் கு வியலின் மீது அவர் நின்று கொண்டு வெற்றிச் சிந்து பாடுகிறார் மன்னிக்கவும் வெற்றிச் சிந்தா வெறிச் - - சிந்தா என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. - அவர் தலைமையில் மௌன ஊர்வலம் செல்லும் போது கூட அண்ணா சாலையில் பல இடங்களில் வன்முறைச் செயல்களை நடத்தியிருக்கிறார்கள். ஒரு வேளை, உனக்கு நான் தை எழுதிக் கொண் ருக்கும்போது கடற்கரையில் காமராசர், குறைந்த பட்சம் அவர் தலைமை வகித்த ஊர்வலத்தினர் நடத்திய வெறி யாட்டங்களையாவது கண்டித்துப் பேசிக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். வன்முறையைக் கண்டிப்பது பொதுவான விவகாரமாகும். எந்தக் கட்சியினர் நடத்தினாலும் அதனைக் கண்டிக்கிற தூய உள்ளம் ஏற்பட்டாக வேண்டும். »-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/61&oldid=1692039" இலிருந்து மீள்விக்கப்பட்டது