உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகல்விளக்கு கையில் அண்ணன் மொழி நெஞ்சில்! உடன்பிறப்பே, அகல் விளக்கு கையில்: அந்தகார இருள் சுற்றிலும்! பெருமழை பொழிந்து கொண்டிருக்கிறது: சூறைக் காற்றும் கூட! யில் கொண்டுபோய் சரளைக்கற்கள் நிறைந்த பாதையில் நடந்து மலை உச்சி விளக்கினை வைத்திட வேண்டும். காற்றின் வேகத்தில் விளக்கு அணையாமல் ஒரு கரம் தடுத்த படி இருக்க வேண்டும். மற்றொரு கரத்திலோ அந்தச் சிறிய அழகான அகல் விளக்கு. மழைத் துளிகள் விளக்கின்மீது விழாது காத்திட தலையைக் குனிந்து தலையையே குடையாக்கிக் கொள்ள வேண்டும். காற்றின் வேகம் கடுங்குளிர் - சாட்டையடி போல் விழுகின்ற மழைத்துளி, கால்களிலோ கற்கள் குத்து கின்றன. - வழியும் ரத்தம், மழை நீரோடு கலந்தோடுகிறது. எப் பாடு பட்டேனும் அந்த விளக்கினை சிகரத்தில் சேர்த்து அங்குள்ள மாடத்தில் பாதுகாப்பாக வைத்திடல் வேண்டும், முன்னேற்றக் கழகத்தின் இலட்சியப் பயணத்தைப்பற்றி இதைவிட வேறொரு பொருத்தமான ஒப்புவமையினைக் கூற முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/96&oldid=1692074" இலிருந்து மீள்விக்கப்பட்டது