உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 103 மதியின் உணர்ச்சியைப் பாராட்டிய அதே நேரத்தில் அண்ணா அவர்கள் மிகுந்த கனிவோடு, “நாமெல்லோருமே அங்கிருந்து வந்தவர்கள் தானே; இந்தியை எதிர்ப்பது நமக்குப் பொதுவான விவகாரம்; நமக்கும் திராவிடர் கழகத்துக்கும் 'கொள்கை உடன்பாடுகள்' பல உண்டு;அவைகளில் நாம் வேறுபட்டு நின்றால் எதிர்காலம் தமிழ் நாட்டில் இருளடையும்.” என விளக்கம் அளித்தார்கள். ஒரே நாளில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும்-அண்ணா தலைமை யில் தி.மு.கழகமும் நாடெங்கும் நடத்தின. உடன்பிறப்பே! அதில் எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு, பெரியாரும் -நானும் திருச்சியில் இந்தி எழுத்துக்களை அழித்தோம். திருச்சி புகைவண்டி நிலையத்தில், பெரியார் ஒரு பலகையிலும்-நான் ஒரு பலகையிலும் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தோம். இரு கட்சிகளுக்குமிடையே பகைமை உணர்ச்சி இருந்த போதிலும், கொள்கையை விட்டுக் கொடுக்காத தன்மையும் 'அந்தக் கொள்கை வெற்றிபெற இரு கட்சிகளும் ஒன்றை யொன்று அழிப்பதில் முனையக் கூடாது' என்று அண்ணா வகுத்த நிலையும்தான்- அரசியல், சமுதாயப் பாரம்பரிய முள்ள திராவிடர் இயக்கத்தை இன்று பாதுகாத்து நிற்கிறது. - அண்ணா, சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்; திரு.காமராசர் அப்போது முதலமைச்சர்; பிரதான எதிர்க்கட்சி ஜனநாயகக் காங்கிரசு; அதன் தலைவர் வி. கே. இராமசாமி முதலியார்; அவர்-எதிர்க் கட்சியில் முதல் இடத்தில்; அவருக்கு அடுத்து ஜனநாயகக்