உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 121 கிழித்துக் கொண்டு சென்ற காட்சியும் - குழுமியிருந்தோர் எழுப்பிய எப்படி இருக்கும்' என்பதை முன்னதாகவே எங்களுக்கு அறிவித்து விட்டன! - வாழ்த்து முழக்கமும். 'ஊர்வலம் - •அறிவகத்’தின் வாயிற்புறத்தில், ஒரு சிறிய பந்தல் ஒரு மேடை; அதிலே கழக முன்னணியினர் சூழ்ந்திருந்தனர்; ஒரு நாற்காலியில், எங்களுக்கு முன்பே சென்று நமது என .வி.என். அமர்ந்திருந்தார்; அவரை அணுகி எப் போதும் அவரிடம் சிரித்துப் பழகும் என் வழக்கத்திற்கு ஏற்ப, 'என்ன சார்; என்ன வேண்டும்' என்று கேட்டேன்; 'நமக்கு இனிமேலாவது யாரும் துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்று கூறிக் கொண்டே, தேம்பித் தேம்பி அழுதுவிட்டார்; நான் அவரை, அப்படியே தழுவிக் கொண்டேன்! "எந்தத் துரோகமும் இந்த இயக்கத்தை அழித்து விடாது” என்று நான் அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எங்கள் இருவர் கண்ணீரும் சங்கமமாயின! உடன் பிறப்பே! இந்தக் குடும்பப்பாச உணர்வைத் தானே நமது அண்ணனும் அந்த அண்ணனைத் தந்த பெரியாரும் நமக்குச் சொத்தாக்கி விட்டுச் சென் றுள்ளனர்! - அந்தப் பாசத்தை நாசமாக்க, இடையிடையே எழுந்த மோசமும் - வேஷமும் வேஷமும் நிரந்தரமாக நம்மை வென்ற தில்லை என்பதைக் காட்டும் சான்றாகத் திகழ்ந்ததே - நமது தலை நகரம் எடுத்த முப்பெரு விழாவாகும்! - கதிரவன் தோன்றா முன்னங் கடுந்திறல் மறவ வெள்ளம் கதுமென வெழுந்து போந்து களத்திடைப் பரந்த தாங்கே அதிர்குரல் முரசம் சங்க மருந்துடி பதலை கானம முதிர்கிளை முழவமற்றும் முகிலென முழங்கிற்றம்மா'