உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கலைஞர் “கூவம் சுத்திகரிப்பு-வள்ளுவர் கோட்டம்- கட்டபொம்மன் கோட்டை- பூம்புகார் புனர் நிர் மாணம் போன்றவற்றில் செலவிடும் பணத்தை, நிரந்தர வேலை வாய்ப்புக்களைத் தரக்கூடிய தொழில் பெருக்கத்துக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற வாதத்தில் அர்த்தமில்லாமல் போகவில்லை” என்று 'கல்கி' சுட்டிக்காட்டுகிறது. சென்னை நகரத்தில் பேயாடுகின்ற பெண்ணின் தலைவிரி கோலம் போல் காட்சி தந்து கொண்டிருந்த கூவத்தைக் கரைக்கட்டி-சீர் செய்திருக்கிறோம்; இன்னும் முழுமையான சீர்திருத்தம் முடிய சில பணிகள் பாக்கியிருக்கின்றன; இது வரை முடித்த பணிகளையே வேறு மாநிலத்தவரும், வெளி நாட்டிலிருந்து வருகின்ற - ஏற்கெனவே சென்னையை அறிந்தவர்களும் பாராட்டுகிறார்கள். - கூவம் சீர்திருத்தம் தெரிந்த 'கல்கி'யின் கண்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் பணிகள் தெரியவில்லை- பார்த்தாயா? வள் ளுவர் - கோட்டமோ -கட்டபொம்மன் நினைவுக் கோட்டையோ-பூம்புகாரோ-கோடிக்கணக்கான ரூபாய்ச் செலவில் நடப்பவை அல்ல! நடந்தாலும் தமிழர்களின் பெருமையை - வரலாற்றுச் சிறப்பை- இலக்கியப் புலமைக்கு மதிப்பை அளிக்கின்ற காரியங்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைப்பது போற்றத்தக்கதே தவிர, புழுதிவாரித் தூற்றத் தக்கது அல்ல! கல்கி' உயிரோடு இருந்திருந்தால், இப்படி ய ஒரு தலையங்கம் எழுதியிருக்கமாட்டார்; ஏனெனில், பாரதிக்கு அரசாங்கம் செய்யத் தவறிய காரியத்தை எட்டயபுரத்தில், 'பாரதி மண்டபம்' அமைத்ததின் மூலம் செய்து காட்டி- ஆண்டுதோறும் விழா எடுக்கச் செய்தவர் அவர்!