உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கலைஞர் சமஷ்டியாக தில்லி சர்க்கார் அமையவேண்டும் என்கிற அகில இந்தியப் பிரச்சினையையே தி.மு.க. தனது அடிப்படை யாகக் கொண்டுள்ளது. 66 'அரசியல் சாசனப்படி இந்தியா சமஷ்டி முறையைப் பின்பற்றுவது என்றாலும் மத்திய சர்க்கார் பெருத்த அதிகாரங்களைப் பெற்று ராஜ்ய சர்க்கார்களை நகரசபையின் ஸ்தானத்துக்குக் கொண்டு வந்துள்ளது." இந்தியா போன்ற ஒரு தேச நிர்வாகத்தின் பொறுப்புக் களை மத்தியில் மட்டும் குவிப்பது திறமையின்மையைத்தான் உண்டாக்கும். அதோடு மத்திய சர்க்கார் ராஜ்ய சர்க்கார் களை அடக்கியாளும் கொடுமையும் சேருகிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்குத் தேசம் தெரிவிக்கும் எதிர்ப் பின் உருவமே தி.மு.கழகம். அது 'தேசப்பிரிவினை கோஷ்டி என்பது காங்கிரஸ்காரர்களின் கற்பனைப் பூச்சாண்டியே யாகும். உடன்பிறப்பே! 19- 3 - 67 'கல்கி'யின் தலையங்கப் பகுதிதான் இது! அதே 'கல்கி' இப்போது மாநில சுயாட்சி கேட்கும் நம்மைப் பார்த்து 'பசுத்தோல் போர்த்திய புலிகள்' என்று கூறி இந்திய ஒற்றுமைக்கு நம்மைப் பகைவர்களாகக் கற்பனை செய்கிறது! பழைய 'கல்கி'யின் மொழியில் சொல்ல வேண்டு மானால் 'பூச்சாண்டி' காட்டுகிறது! உன்மீதும் என்மீதும் உள்ள எரிச்சலில் உண்மைகளை மறந்துவிட்டு, எதையாவது எதிர்ப்பாக எழுத வேண்டும். என்று முனையும் போது திரும்பிப் பார்க்கும் திறனை இழந்து விடுகிறார்கள்! போகட்டும்! நாம் திரும்பிப்பார்ப்போம்! முன்னேறு வோம்! வெற்றி நமதே! வா! அன்புள்ள மு.க. 3-11-74.