உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கலைஞர் இதற்குக் காரணம் என்ன? ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது; நாம், பதவி பிடிக்க வேண்டுமென்று கட்சி தொடங்கவில்லை; நமது கழகத்துக்கு வயது இருபத்தைந்து தான் என்றாலும், இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தி லேயே தமிழகத்தில் தோன்றிய மறுமலர்ச்சி யுகத்தின் தூதுவர்கள் நாம்! - தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தோன்றிய தென்னிந்திய நல உரிமைச் சங்கம், இந்தச் சமுதாயத்திலே உருவாக்கி இருக்கின்ற ஒளியை யாரும் மறுத்திட இயலாது! அந்த ஒளி, மகத்தானதாக-விரிவானதாக இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், அன்று கிளம்பிய சிறு பொறி தான், இன்று நாம் கையில் ஏந்தியிருக்கிற தீபச் சுடருக்கு முழு முதல் ஆதாரமாகும். சுய மரியாதை இயக்கத்தின் தோற்றம், அடித்தள- நடுத்தர மக்களின் நடையிலே ஒரு மிடுக்கினை ஏற்படுத்தி யதும், அந்தச் சமுதாயப் புரட்சியைத் தொடர்ந்து தென் னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக-இன உரிமைப் போர் வாளாக மாறியதும் மாறியதும் கடந்த காலத்துச் சரித்திரப் புகழ் ஏடுகளாகும்! வயது ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருபத்தைந்துதான் என்றாலும். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக் காலத்து உணர்வுகள்- வரலாறுகள் - தயாகங் கள்-போராட்டங்கள் - அனுபவ ஆற்றல்கள் - தலைவர்கள் - தள பின்னணியாகக் பதிகள் - தொண்டர்கள் - அனைத்தையும் கொண்டு வயது முதிர்ச்சியிலே பெற வேண்டிய அனுபவத் தையும் நிதானத்தையும் பெற்றுத் திகழ்கிறது! ‘இளமையின் கம்பீரமும், முதுமையின் பொறுமையும் இந்தக் கழகத்திற்குக்கிடைத்துள்ளதற்கு இதுவே காரணம்”