உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கவிதா - என்ன, புதிர் கலைஞர் போட்டுக் "யார் அந்தக் கொண்டே போகிறாய்" எனக் கேட்கத் தோன்றுகிற தல்லவா உனக்கு? நீ படம் பார்த்திருந்தால், இந்நேரம் உனக்குப் புரிந் திருக்கும்; நமது அரங்கண்ணல் தயாரித்த -நண்பர் பாலச் சந்தர் டைரக்ட் செய்துள்ள 'அவள் ஒரு தொடர்கதை’ என்ற அற்புதச் சமூகக் காவியத்தில் வருகின்ற உயிர்நாடி தான் அந்தக் கவிதா! படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன்; 'உனக்கு இந்த வாரம் என்ன கடிதம் எழுதுவது, என்ற என் கேள்விக்கு, உடனடியாகப் பதில் கிடைத்து விட்டது; பிற்பகல் தூக்கத்தைத் துறந்துவிட்டு இதனை உனக்கு எழுதுகிறேன். அந்தப் பெண், எத்தனைத் துன்ப துயரங்களுக்கிடையே அந்தக் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறாள் பார்த்தாயா? அதற்கு அவள் பெறுகின்ற விருதுகள் பார்த்தாயா? - 'வீட்டைத் திருத்த வேண்டும்' என்ற ஒரே இலட்சியத் திற்காக உழைக்கும் அவள் - தன் கூடப் பிறந்தவர்கள் தவறு செய்யும் போது, தாட்சண்யம் காட்டாமல் கண்டிப் பாக நடந்து கொள்கிறாள்; அதற்கு அவள் பெறும் வெகு மானம், சண்டாளி' என்ற தங்கப்பதக்கம்! கடமையையும் - பொறுப்பையும் உணராமல், காவி கமண்டலங்களோடு திரிகின்ற தந்தையை அவள் மதிக்க வில்லை; அதற்கு அவளுக்குச் சூட்டப்படுகின்ற மகுடம், 'மகாபாபி' என்பதாகும்! கவிதா, சம்பாதித்துப் போடுவது போதாது என்று- தன் சினிமாச் செலவுக்காக. குருட்டுச் சிறுவன்' தன் கண்ணற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பிச்சையெடுக் கிறான்; அதைக் கண்டு அவள் குமுறுகிறாள்-தான் இவ்வளவு