உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஃ திமிர் பிடித்தவள்! ஃ கர்வி! சண்டாளி! ஃ இராட்சசி! ஃ நடமாடும் நெருப்பு! ஃ பாவி! கலைஞர் இந்தப் பரிசுகளை எதிர்பார்த்து, அவள், அவர்களுக் காகத் தொண்டாற்றக் கிளம்பி விட்டாள்! அவள் - ஆம் - கவிதா -அவர்களுக்காக வாழ்கின்றாள்! அதைப் போலவே அவர்களும், அவளைத் திட்டினாலும், கடிந்தாலும் - அவளால்தான் தங்களை வழிநடத்திச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள்! உடன் பிறப்பே! படத்தில் வரும் கவிதா, ஒரு தொடர் கதை! 'கவிதா' இடத்தில் நமது கழகத்தை வைத்துப்பார் 'கழகம் ஒரு ரு தொடர்கதை' என்று சொல்லத் தோன்று கிறதல்லவா? படத்தை ஒரு முறை பார்! பார்த்த பிறகு, இந்தக் கடிதத்தை மறுமுறையும் படி! படத்தில் வரும் வீடு-நாடாகும்! கதாபாத்திரங்கள்-நாட்டில் நடமாடும் பல்வேறு அரசியல், சமூகப் பாத்திரங்களாவர்! - கவிதா - கழகமாகத் தோன்றும் உன் மனக் கண்ணுக்கு! அன்புள்ள மு.க. 24-11-74,