உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலைஞர் "தமிழகத்திற்கென்று இருக்கின்றனவே தனிச் சிறப்பு: கள்; என் செய்வது? எப்படி மறைப்பது? தம்பி! உன்னால் இயன்ற அளவுக்கு தமிழரின் தனிச் சிறப்புகளைக் குறித்து டுத்துரைக்கும் பணியிலே ஈடுபடக் கேட்டுக்கொள்கிறேன். போலிப் பெருமை தேடிக்கொள்ளவோ, நாட்டின் பிறபகுதி களைத் தரக்குறைவாகக் கருதுவதற்கோ அல்ல தம்பீ; தமிழகத்தின் தனிச் சிறப்புக்களை நாம் அறிந்திட வேண்டும். : 99 . பொன்மன அண்ணன், பொங்கலுக்கு எழுதுகிறார் கட்டுரை! அதில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் கொள்கைக் கு அடித்தளம் அமைத்துக் காட்டுகிறார். அந்தக் கொள்கை நிறைவேற அரசியல் சட்டம் திருத்தப் படவேண்டுமென்கிறார். "தமிழ், தமிழர், தமிழகம், அந்த இன்ப உணர்வுகளை இழந்திடாதே" என்று எச்சரிக்கிறார். உடன் பிறப்பே, அவர் நமக்கு எழுதிய கடிதத்தைப் படித்த. பிறகு நாம் இணைந்து எழுப்புகிற முழக்கம்தான் உறவுக்குக் கைகொடுப்போம் GL உரிமைக்குக் குரல் கொடுப்போம்" என்பதாகும். அன்புள்ள மு.க. 2 - 10 - 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/18&oldid=1694515" இலிருந்து மீள்விக்கப்பட்டது