உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“டெல்லி லாயத்தில்” உடன் பிறப்பே, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவுத் தபால் தலை வெளியிடும் யோசனையை தபால்தலை ஆலோசனைக்குழு. இருமுறை பரிசீலித்ததாகவும் இதைக் குழு ஏற்கவில்லை யென்றும் ராஜ்யசபையில் தபால்துறை மந்திரி திரு.ராஜ் பகதூர் அறிவித்தார் என்று பத்திரிகைச் செய்தியொன்று கூறுகிறது. 66 இருட்டரையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!" எனப் பெருமூச்சுவிட்ட பாவேந்தன் பாரதிதாசன், அஞ்சல் தலை வெளியிடுகிற அளவுக்குத் தகுதி படைத்த கவிஞன் தானா என்று ஆராய்ச்சி நடந்திருக்கிறது. “கனியிடை ஏறிய சுளையும் - கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும்பாலும் நல்கிய குளிரிள நீரும் - wano னி யன என்பேன் எனினும் முற்றல் காய்ச்சுப் தென்னை - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!” என்று கவிதை பாடித் தமிழுக்கு யாரும் சேர்க்கா த புகழைச் சேர்த்த புலவர் பெருமகனுக்கு அஞ்சல் தலை வெளியிடலாமா என்று ஆராய்ச்சி நடந்ததாம். று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/21&oldid=1694518" இலிருந்து மீள்விக்கப்பட்டது