உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைஞர் அதனை சந்தேகமாக இருக்கிறது. யார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை என்றுதான் சொனனேன். யொட்டித்தான் நீதிபதி விசாரணை ஏற்பாடாயிற்று. "That the dead body found, in the reservoir is in all probability that of Udayakumar, that of Udayakumar, but he did not die due to police excess and that he should have died as a result of drowning only on the night of 23rd July 99 1971." என்று தான் நீதி விசாரணை நடத்திய நீதிபதி குறிப்பிட் டிருக்கிறார். பாளைச்சம்பவமானாலும், கிளைவ் விடுதி சம்பவ மானாலும் உண்மை நிலையை அறியத்தான் கழக அரசு நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்தது. விசாரணையில் வெளிவந்த விபரங்களின் அடிப்படையில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களைத் தூண்டி விடுகிறவர்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்கிறார்கள்? இவர்கள் ஆண்டபோது என்ன செய்தார்கள் என்பதை மறந்து விட்டு மனச்சாட்சி இல்லாமல் பேசு கிறார்களே; நியாயம்தானா? தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நான் சொல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு பேசுவதும், எழுதுவதும், அறிக் கைகள் விடுவதும் இன்றைய அரசியலில் சர்வ சாதாரண மாகி விட்டது! உடன்பிறப்பே, பொய்யை ஓங்கிச் சொன்னால் உண்மை யாகி விடாதா என்று எதிர்பார்க்கிறார்கள். பொய்யைக் கருவியாகக் கொண்டு ஒரு அரசைக் கவிழ்த்துவிட சதி செய்கிறார்கள். அவர்தம் கணைகளைத் தாங்கிக் கொள்ள நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது நமது கழகம் என்பதை அவர் கள் உணரவில்லை; பாவம்! 1 1 அன்புள்ள, மு.க. 12 73 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/26&oldid=1694524" இலிருந்து மீள்விக்கப்பட்டது