உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னகையும் பெருமூச்சும்! உடன் பிறப்பே, சென்னை மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்றுள்ள பணக்கையாடல் பற்றிக் கழக அரசு எடுத்துள்ள நடவடிக் கைகளைப் பற்றி நீ பாராட்டி எழுதியுள்ளதைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கோ,அரசுக்கோ தனிப்பட்ட முறையில் பெருமை தர வேண்டுமென்பதற்காக இந்தப் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதை நீ அறிவாய். இன்று நமது கழகத்தின் முன்னால் மேயர்களும் மாநகராட்சி உறுப்பினர்கள் சிலரும் கூடக் கைதாகியுள்ளனர். சட்டம், தன்னுடைய கடமையைச் செய்யும் போதும், நீதியின் நெஞ்சம் தன்னுடைய தீர்ப்பை வழங்கிடும் போதும் அவைகளின் கண்ணோட்டத்தில் எல்லோரும் சமமே என்ற அழுத்தமான எண்ணத்திற்கு நாம் சொந்தக்காரர்கள். ஆகவே கவலைகள் அலைமோதிடினும், கண்கள் குளமாயினும், நட்பு குறுக்கிடினும், உறவு பாசம் போன்ற உணர்வுகள் இதயத்தைச் சுக்கு நூறாக ஆக்கிடினும்—அனைத்தையும் பொறுத்துக் கொண்டு கடமை வழி நடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் யார்யார் வரவேண்டுமென்று அல்லும் பகலும் நாம் அனைவரும் பாடுபட்டோமோ அவர்களில் சிலர், இன்று சிறையிலே இருக்கிறார்கள். நமது கழக. ஆட்சியில், நமது கழக மாநகராட்சி மன்ற உறுப்பினர் களிலே சிலர்! சிறையில் இருக்கிறார்கள்! 1959 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு மேயர் தேர்தலிலும் நமது மேயர் வரவேண்டுமென்பதற்காக நான் பட்ட கஷ்டங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/32&oldid=1694530" இலிருந்து மீள்விக்கப்பட்டது