உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 25 படும்போது அதற்கும் சிலர் அரசியல் உள்நோக்கம் கற்பிக் கிறார்கள் அல்லவா; அப்படிப்பட்டவர்களுக்கு உண்மையை உணர்த்திடத்தான் திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல் இருந்தபோது ஆற்றிய உரையை நினைவுபடுத்து வராக கிறேன். முன்னாள் முதல்வர் அவர்கள், எவ்வளவோ கார சாரமாக என்னைத் தாக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத் தில் இந்த ஒரு விஷயத்தில் தனக்குள்ள அரசியல் அனுபவத் தின் காரணமாக ஒரு நல்ல விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்கியதற்காக நான் நன்றி பாராட்டுகிறேன். அரசின் செயல்கள் அனைத்தையும் ஆதரித்தால்தான் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கப்படுமா என்று சிலர் கேட்கக் கூடும். று பாராட்ட வேண்டியதைப் பாராட்டி, சுட்டிக் காட்ட வேண்டிய தவறுகளைச் சுட்டிக் காட்டிட யார்முன் வந் தாலும் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்றிடவும், தன்னைத்தானே தவறு இருப்பின் திருத்திக் கொள்ளவும் கழகம் தயாராக இருக்கிறது! கழக அரசும் அவ்வாறே! 66 டிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்” என்ற குறளை நாம் மறந்திடவில்லை. அன்புள்ள, மு.க. 16 12 73 12-73 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/35&oldid=1694533" இலிருந்து மீள்விக்கப்பட்டது