உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 27 திற்கு நீ காணிக்கையாக வழங்கியபோது அருந் தொண்டாற்றிய உன் அழகிய கைகளை எடுத்துக் கண்ணிலே ஒத்திக் கொள்ளலாம் போல் இருந்தது. உன் உழைப்பு வெல்க! வெல்க!! என்று வாழ்த்துகிறேன். திருச்சியிலே உன் தொடர்பணியிலே சிறிது சோர்வு! அந்தச் சோர்வு போக்க நான் சற்றுக் கடுமையாகக் கூறிய சொற்களையும் பொறுத்துக் கொண்டு புன்னகை புரிந்தாயே; கண்மணி! அதுதானே யாராலும் பிரிக்க முடியாத நமது குடும்ப பாசம்! சேலத்து நாமக்கல் பாறையில் நீ நமது கழகத்தின் சீகரமாக நின்றாயே. அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். ஒரு லட்சத்து முப்பதாயிர ரூபாய் நீ வழங்கியது பெரிதல்ல! லட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்களை என் எதிரே அமரவைத்து "பார்த்தாயா சேலத்துச் சிறப்பை!" என்று பல் எல்லாம் முல்லையாகச் சிரித்துக் காட்டினாயே; உடன்பிறப்பே! என் உயிரின் மூச்சே! உன் நெஞ்சுறுதியும், உழைப்பும் உள்ளவரையில் அண்ணன் உரு வாக்கிய இந்தக் கழகத்தை யார் என்ன செய்ய முடியும்? உன் எதிரே பொய்மலைகள் பொடிப் பொடியாகும்! துரோகம் தூளாகும்! மிரட்டல், இனி உன்னைக் கண்டு மிரண்டோடும்! கழகத்தின் சக்தி c! அண்ணன் கொள்கைக்குக் காவல் நீ 1 ஆர்த்திடும் பகைக்குக் காலன் நீ! நீ வாழ்க! வெல்க! அன்புள்ள, மு.க. 181273

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/37&oldid=1694535" இலிருந்து மீள்விக்கப்பட்டது