உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாயிரம் பாடி வீடுகள்! உடன்பிறப்பே, வரும் ஜனவரி ஐந்து ஆறு நாட்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு கிழமைகளில் நமது கழகத்தின் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட கிளை அமைப்புக்களின் தேர்தல் நடைபெற இருக் கிறது. பத்து லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள், இருப தாயிரம் கிளைக் கழகச் செயலாளர்களையும் ஏனைய கிளை நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கப் போகும் நமது அடித்தள அமைப்புக்கள் உருவான பிறகு அதன் மேல்மட்டங்களின் தேர்தல் படிப்படியாக நடைபெறத் தொடங்கி விடும். அண்ணா அவர்கள் 1949ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் நமது கழகத்தைத் தொடங்கியதையொட்டி மிக விரைவாகவே கழகத்தின் ஜனநாயக அமைப்புக்கள் செயல்படத் துவங்கி விட்டன. ஏற்கனவே ஏற்றுக் கொண் டிருந்த இலட்சியங்களுக்கான வடிவம் அமைக்கப்பட்டது. கொள்கை, கோட்பாடுகளைப் பிரகடனம் செய்தோம். கழக உறுப்பினர்கள், அமைப்புக்கள் நிர்வாகிகள் அனைத்துக்கு மான கழகச் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன. கழகம் தோன்றிய காலத்திலிருந்து கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டினை,நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலம் வரையில் அண்ணா வடித்தளித்த ஜனநாயக நெறி தவறாமல் கழகத்தின் கட்டுப்பாடு காக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைபோட்டு வருகிறோம். கழகக் கட்டுப்பாட்டை உடைத்தவர்களை - அவர்களில் முன்னணி வரிசை, தொண்டர் வரிசை என்ற வேறுபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/45&oldid=1694543" இலிருந்து மீள்விக்கப்பட்டது