உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கலைஞர் ஓரிசாமாநிலத்தில் கவிழ்ந்தது எந்த ஆட்சி? காங்கிரஸ் ஆட்சிதான்! கர்நாடகத்தில் கலவரம் நடந்தது எந்தக்கட்சி ஆட்சியில்? காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான்! குஜராத் பட்டினிப் போராட்டம்! ஊரடங்குச் சட்டம்! துப்பாக்கிப் பிரயோகம்! நூற்றுக் கணக்கில் மக்கள் சாவு! மந்திரிசபை வீழ்ச்சி! எந்தக் கட்சி ஆட்சியில்? எல்லாமே; இங்கு காமராசரால் ஆதரிக்கப்படுகிற காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்! ஆனால் மக்கள் அவற்றைப்பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலேதான் இடைவிடாத உழைப்புக்குச் சொந்தக்காரனாகிய நீ, பம்பரம்போல் சுழன்று பணியாற்று கிற பாங்கினை என் அகக்கண்கள் காணுகின்றன. உன்னைத் திட்டுகிறார்கள், உன் தலைவர்கள்மீது பழி சுமத்துகிறார்கள் - அவதூறு கூறியே அரசியல் நடத்தலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஊழலிலே பிறந்து, ஊழலிலே வளர்ந்து, ஊழலுக்கே வாழ்க்கைப்பட்டு, ஊழல்களையே பெற்றெடுத்து ஊரிலே உலவிக் கொண்டிருக்கிற சில பேர்கள், உத்தமிபோல் நடித்துக்கொண்டு, கண்ட இடத்து ஊழலைக் கண்டித்துத் தண்டிக்கும் நம்மைப் பார்த்து ஊழலோ! ஊழல்! என்கிறார்கள். . 90 இவர்களுடைய கறுப்புப் பணத்தால் மணம் வீசும் தோட்டங்கள் எத்தனை? புகை கக்கிடும் ஆலைகள் எத்தனை? இவர்தம் கறுப்புப் பணத்தின் லீலைகள் எத்தனை? மாளிகை கள் எத்தனை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/56&oldid=1694554" இலிருந்து மீள்விக்கப்பட்டது