உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞர் பகைவர்களின் பல் இளிப்பில் மயங்கி விடும் ஒன்றிரண்டு பலஹீனர்கள், நம்மைக் காட்டிக் கொடுத்த கொடுமை- பத்திரிகைகளில் பெரும்பாலும் இருட்டடிப்பு அல்லது கற்பனைக் கயிறு திரிப்பு இழிமொழிகள் இல்லாதது கூறல் எடுத்தெறிந்து பேசுதல். - - - ஏசல்கள் - இத்தனைச் சூழல்களையும் சுழலும் ஆயுதங்களாகக் கொண்டு நமது கழகத்தை அழிக்க நமது கொள்கையை வீழ்த்த நமது கொடியைச் சாய்க்க நமது கொற்றத்தைக் கவிழ்க்க “பகீரத" முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணன் அடிக்கடி சொல்வது போல, வீசும் புயலுக் கிடையே, கொட்டும் மழையில், சரளைக்கல் மீது நடந்து குன்றின் உச்சியில் காண்டு போய் வைக்க, அகல் விளக்கு ஏந்தி, இதனை அணையாமல் காத்து உச்சி நோக்கி ஏறிடு கின்ற மன உறுதியும் கொள்கை ஆழமும் இருந்திடில் யாரும் அசைத்திட இயலாது நம்மை! அணைத்திட இயலாது நமது இலட்சிய தீபத்தை! அந்த உறுதியின் கருவூலமாய் இருக்கின்ற கண்மணிகள், கழகப் பொறுப்புக்கள் ஏற்க “நான் முந்தி, நீ முந்தி" என்று போட்டியிட்டுள்ளார்கள். அடுத்து மாவட்டக் கழகத் தேர்தலிலும் அந்தப் போட்டி தொடர இருக்கிறது. அதற்கு அடுத்து தலைமைக் கழகத் தேர்தல். இந்தக் கடிதம் உன் கைக்குக் கிடைக்கும் வேளையில், நீ ஒருவேளை, மாவட்டக் கழகத் தேர்தலில் ஒரு வேட்பாள ராகவும் இருக்கலாம்; அல்லது வாக்காளராகவும் இருக்கலாம். ஒரே அளவும், ஒரே மாதிரி ஒளியும் கொண்ட பத்து முத்துக்களில் ஒன்றிரண்டு முத்துக்களை நீ கையில் எடுத்துக் கோப்பதாலேயே மற்ற முத்துக்கள் சொத்தைகள் என்று று பாருளல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/76&oldid=1694576" இலிருந்து மீள்விக்கப்பட்டது