உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கலைஞர் எம்.ஜி.ஆர். கட்சியினர் ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவிப்பு. ‘அலைஓசையைப் படிக்காதே' இது காஞ்சிபுரம் மாநாட்டுப்பேச்சு! து அலைஓசையைத் தவிர வேறு எகையம் படிக்காதே-இது அதன் பின்னர் விடுத்த அறிக்கை. இப்போது அலைஓசையில் எம்.ஜி.ஆர். பற்றி ஏதாவது எழுதினால் அதற்கும் கருணாநிதிமீது தான் ன் கண்டனம்! காய்ச்சல்! கணைகள்! நேரு மறைந்த அடுத்த சில நாட்களில் சென்னையில் காமராசர் பிறந்த நாள் ஊர்வலம். பொதுப்பணித்துறை பைப்புகள் எல்லாம் வீதியெங்கும் கொடி மரங்களாயின. அப்போது அவர் முதலமைச்சர்கூட அல்ல! அரசுத்துறை வண்டிகள், ஜீப்புகள், டிராக்டர்கள் ஊர்வலத்தில் அணிவகுத்தன. சட்டசபையில் கேட்டபோது, வேறு வழி யின்றி 'ஆமாம்' என்று ஒப்புக் று கொண்டார் முதல்வர் பக்தவத்சலனர். இன்று, இந்தச் சாமானியனுக்குப் பிறந்த நாளை நீ கொண்டாடுகிறாய். சாமானியர்களுக்கான திட்டங்களை அறிமுகப்படுத்துகிறேன். சிலர் சீறுகிறார்கள். சிலர் எதிர்க்கிறார்கள். பரவா யில்லை. அவர்கள் முன்பெல்லாம் என்பிறந்த நாட்களின் போது வாழ்த்தியதை எண்ணி, இப்போது வசைபாடுவதை மறந்துவிடுகிறேன். அவர்களுக்குப் பல பிறந்த நாட்கள் வரட்டும் என் மான சீகமான வாழ்த்துக்கள் அவர்களுக்கு என்றும் உண்டு. கொடைக்கானலில் இருந்தும்கூட காமராசர் கோபம் கொப்பளிக்கப் பேசியிருக்கிறார்,பார்த்தாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/82&oldid=1694582" இலிருந்து மீள்விக்கப்பட்டது