உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 75 மணக்கப் பூமணக்கும் தமிழ்ப் பேச்சால் கொள்கை முரசறை யும் என்மூத்த உடன்பிறப்பாம் நாவலரது விழாச் சிறப்பு, கழகச் சிறப்பாகத் திகழக் கச்சை கட்டிச் செயல் புரிந்திடுக. என் அன்பே, இந்த ஆண்டு நீயும் நானும், கடல் கடந்து வாழும் நமது உடன் பிறப்புக்களும், மகிழ்ச்சியும் எழுச்சியும் உணர்ச்சியும் மாறி மாறி அலைபாயும் ஒரு நிலைக்கு ஆளாகப் போகிறோமே; உனக்குத் தெரியுமா? -- VCXO உயிரின் செப்டம்பர் 15-நம் ரத்தத்தின் ரத்தமாம் உயிராம் கண்ணின் ஒளியாம் அண்ணனின் அறுபத்தி ஐந்தாவது பிறந்த நாள் விழா! செப்டம்பர் 17 இருண்டு, வௌவால் - அடைந்து கிடந்த தமிழ்ச் சமுதாயமெனும் மண்டபத்தில் ஒளிவிளக் கேற்றி வைத்துத் தன்மானச் சுடர் பரப்பிய பெரியாரின் பிறந்தநாள் விழா! அய்யா, அண்ணா- இருவர் பிறந்த நாள் விழாவையும் இருவரும் நம்மிடம் இல்லாத நிலையில் கொண்டாடுகிறோம். மன்னித்துவிடு! அவர்கள் நம்மிடம்தான் இருக்கிறார்கள் நம் நெஞ்சை விட்டு எங்கும் போய்விடவில்லை. -OO கண்ணின்மணியே! கழகம் பிறந்த இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவையும் இந்த ஆண்டு நாம் சந்திக் கிறோம். தமிழகத் தலைநகர் சென்னையில் செப்டம்பர் பதினேழாம் நாள் அறிஞர் அண்ணா நமது கழகத்தைத் துவக்கினார். கொட்டும் மழையில் அவருடன் மேடையில் வீற்றிருந்த உடன்பிறப்புக்களில் நானும் ஒருவன். அதே ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் நாடெங்கும் கழகம் தொடங்கப் பெற்றது. நான் தூத்துக்குடியிலும், கோயில் பட்டியிலும் கழகத் தொடக்கவிழா நடத்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/85&oldid=1694586" இலிருந்து மீள்விக்கப்பட்டது